பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

அப்பாத்துரையம் 40

-

ஆற்று வெள்ளத்தை மலைமீது எதிர்த்துப் பாயச் செய்தாலும் செய்யலாம்; ஆனால், இனி என் எண்ணத்தை மட்டும் உன்னால் மாற்றவே முடியாது. உடனே ஓடிப்போய் உன் குழந்தையைச் சுணக்கமில்லாமல் கொண்டு வா; இல்லையானால் நீயும் உன் வறுமைமிக்க குடும்பமும் என்ன பாடு படவேண்டும் தெரியுமா? போ, போ," என்று ஓணான் அவனை வற்புறுத்தியது.

பாவம்,பெரியண்ணன் இனிச் செய்தவற்கு வேறு ஒன்றுமே இல்லை; எண்ணிப் பார்க்கக்கூட இடமில்லை என்பதை அறிந்துகொண்டான்; ஓணானுக்குச் சினம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதிலும் அது எவ்வளவு பெரிய ஓணான்; என்னென்ன செய்யுமோ! பாதாளக் குகையில் அதனோடுகூட இன்னும் என்னென்னவெல்லாம் இருக்குமோ! சொல்லியபடி நடப்பது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டு அவன் வீடு நோக்கி ஓடிவந்தான். அவன் முகத்தில் ஒரே துயரம் குடிகொண்டிருந்தது. வாயிற்படியில் அவனை எதிர்பார்த்து நின்ற அவனுடைய மனைவிக்கு, அவனைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. பெரியண்ணன் ஏழை தான்; எனினும், வழக்கமாகச் சிரித்த முகத்தோடுதான் வீடு திரும்புவான்.

“ஏன் இந்த முகவாட்டம்? வேலை போய்விட்டதா? கீழே எங்கேயாவது விழுந்து அடிபட்டு விட்டதா? இல்லை, உழவுமாடு செத்துப்போய் விட்டதா?” என்று அவள் பரிவுடன் வினவினாள்.

பெரியண்ணன் ஏதும் பேச வாய் வராததால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றான். அவன் உள்ளம் அவ்வளவு தூரம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள, அவனிடமிருந்து எல்லா விவரங்களையும் அவன் மனைவி கேட்டுத் தெரிந்துகொண்டாள். முதலை ஓணானுக்கு அவர்கள் கடைக்குட்டிப் பெண் பச்சைக்கிளியை வளர்ப்புப் பெண்ணாகக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குடும்பத்துக்கே கேடுதான் என்றும் அறிந்து கொண்டாள்.

முதலை ஓணான் சொன்னதெல்லாம் நல்லதுக்கென்று தான் முத்தரசி நினைத்தாள். “ஒருவேளை நமக்கும் நம் குழந்தை பச்சைக்கிளிக்கும் நல்லகாலம் பிறந்து விட்டதோ என்னவோ! ஓணான் பொல்லாதது என்று யார் சொன்னார்கள்; எப்படித் தெரியும்? அது அப்படிப் பொல்லாததாயிருந்தால், உங்களை