பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

201

செய்வது நல்லது என்றே நினைத்தாள். மேலும் விதியின் முடிச்சு அப்படி இருந்தால் அதற்கு மாறாக நடக்கத்தான் முடியுமா? "இந்தத் தண்ணீர்க் குடத்தைக் கொண்டுபோய் அம்மையிடம் கொடுத்துவிட்டு நீ கூறியபடி உன்னோடு வருகிறேன்,” என்று அவள் விடை கூறிச் சென்றாள்.

நீ

என்

சொன்னதுபோல் ஒரு நொடியில் அவள் அந்த இடத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்தாள். அந்தக் காவலாள் அவளை அழைத்துக்கொண்டு செடி கொடிகளுக்குள் மறைந்திருந்த அடித்தடம் வழியாகப் பலாவும் மாவும் நிறைந்திருந்த காட்டினூடே கூட்டிச் சென்றான். சிறிதுதொலை சென்றதும் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. மிளகுக் கொடியும் கொடிமுந்திரியும் செறிந்து படர்ந்திருந்த அத்தோட்டத்தை அடைந்ததும் அங்கே கண்ணாடியாலான கருங்கைவழி ஒன்று தென்பட்டது. இருவரும், அதில் இறங்கிச் சென்றனர். குறித்த டத்தை நெருங்கியதும் அந்த ஆள்காரன் அவளிடம் எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னான். அவளுக்குக் கணவனாகப் போகிற மாப்பிள்ளை மிகுந்த செல்வவான் என்றும் பேரழகன் என்றும் ஆனால், அவனுக்கு ஒரு சாபம் இருக்கிற தென்றும் அவன் கூறினான். கலியாணமானபின் மூன்று ஆண்டு மூன்று திங்கள் மூன்றுநாள் வரையில் மீனாள் கணவன் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கக்கூடாதென்றும், பார்த்தால் இருவருக்கும் பெருங்கேடு விளையுமென்றும் அவன் சொன்னான். எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று கூறினாலும் தான் அப்படியே நடக்கத் தயாராக இருப்பதாக மீனாள் தெரிவித்தாள். சற்று நேரத்தில் அவர்கள் ஒரு மாய அரண்மனையை அடைந்தார்கள். அதன் சுவர்களெல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. கட்டில், மஞ்சம் முதலியவை வெள்ளியால் செய்து வயிரமும் மணியும் வைத்து இழைக்கப்பட்டிருந்தன. தரையில் அழகான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் பட்டு மெத்தையும் திண்டுகளும் இடப்பட்டிருந்தன. இவைகளைக் கண்டு மீனாள் வியப்பால் விழி மிரண்டு நின்றாள். ஆள்காரன் தன் கைகளைத் தட்டி ஓசை செய்தான். உடனே அழகான தாதிமார் இருவர் வந்து அதைவிடப் பின்னும் அழகான மற்றோர் அறைக்கு மீனாளை இட்டுச் சென்றார்கள்; அவளது கந்தல் ஆடையை அகற்றிவிட்டு