பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

-

அப்பாத்துரையம் 40

அவளுக்குச் சரிகைப் பட்டாடைகளை அணிவித்தார்கள். அவளது கூந்தலுக்கு மண மிகுந்த எண்ணெய் விட்டு வாரி, பூச்சூட்டி, தங்க வயிர நகைகளைப் பூட்டி மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றனர். தாதிமார் கைதட்டி ஓசைசெய்ததும், அங்கே பொன் தட்டுகளிலும் வெள்ளிக் கிண்ணங்களிலும் அறுசுவை இன்னமுத வகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஊசல் கீரையும் ஆறிய கஞ்சியும் குடித்துவந்த மீனாள் தான் கனவிலும் கருதியிராதபடி இன்பமுற உண்டு மகிழ்ந்தாள்.

பிறகு அவளைத் தாதியர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறையின் விளக்கு அணைத்துவிடப்படும் என்றும், இருட்டில் அவளது கணவன் வருவான் என்றும், அவன் முகத்தைப் பார்ப்பதற்காக மீனாள் எந்தவிதமான விளக்கையும் பொருத்தக் கூடாதென்றும் அவளை எச்சரிக்கை செய்தனர். சொல்லியதுபோல் நடந்துவந்தால் அவளும் அவள் கணவனும் நெடுங்காலம் நலமாக வாழலாம் என்றும், பிந்திய காலத்தில் பெருநன்மைகள் சித்திக்கும் என்றும் அவர்கள் அவளிடம் கூறிச் சென்றார்கள்;

அதுபோலவே மீனாளும், அவள் கணவனும் நெடுநாள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இருட்டியபின் தான் அவள் கணவன் அவளைக் காண வருவான். மற்ற வேளைகளில் அவள் வாய்க்குச் சுவையான உணவு வகைகளை உண்பதிலும், மனதுக்குப் பிடித்த ஆடைகளை உடுத்துவதிலும், காதுக்கு இனிமையான பாட்டுக்களைப் பாடுவதிலுமாக இன்பமாய் காலங் கழித்துவந்தாள். ஆள்காரனும் தாதியரும் அவளுக்கு வேண்டும் பணிவிடைகளைச் செய்து வந்தனர்.

ஆனால், ஒருநாள் மீனாளுக்கு அவள் வீட்டைப்பற்றிய னைவு வந்தது. விம்மி விம்மி அழுதுவிட்டாள். உடனே ஆள்காரன் வந்து “செய்தி என்ன?" என்று கேட்டான். அவள் தாயையும், தமக்கையரையும் சென்று பார்த்துவர வேண்டு மென்று அவள் கூறினாள். ஆள்காரன் மாய அரசனிடம் சென்று அவள் விருப்பத்தைத் தெரிவித்து, மீனாள் வீட்டுக்குப் போய் வருவதில் தடையில்லை என்றும் ஆனால் அங்கு அரண்மனையில் நடப்பவைகளையோ, அவள் வீட்டைவிட்டுப் புறப்பட்டபின் நடந்தவைகளையோ யாரிடமும் தெரிவிக்கக் கூடாதென்றும்