பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

(205

சொல்லுங்கள். அப்படிப் பார்த்தால் அவனுக்குள்ள சாபம் நீங்கிவிடும் என்று கூறுங்கள். உங்கள் எண்ணம் ஈடேறி விடும். வெளிச்சத்தில் கணவன் முகத்தைப் பார்த்ததுமே மீனாளின் வாழ்வு சீரழிந்து அவளுக்கு எல்லாத் துன்பங்களும் வந்துவிடும்,” என்றாள்.

மீனாளின் உண்மைநிலை முழுவதையும் தெரிந்து கொண்டதனால் பொன்னம்மைக்கும் சின்னம்மைக்கும் மட்டில்லாத மகிழ்ச்சி; மேலும், அவள் வாழ்வைக் கெடுக்கும் வழியும் தெரிந்துவிட்டதால் கூடுதல் மகிழ்வு கொண்டனர். கிழவியிடம் விடைபெற்றுக்கொண்டு இரு சகோதரிகளும் மலைமுகட்டிலிருந்து இறங்கி அவர்கள் குடிசையை அடைந்தனர்.

சில நாள் பொறுத்து மீனாள் மறுமுறை அவர்களைப் பார்க்கவந்தாள். முன்போலவே தங்கப் பணப்பை கொண்டு வந்திருந்ததுடன் தமக்கையர் இருவருக்கும் சரிகைப் பட்டாடைகளும் கொண்டுவந்திருந்தாள். அக்காள்மார் இருவரும் தங்கையைத் தனியாக அடுக்களைக்கு அழைத்துச் சென்று, "மீனா, மீனா, உன்னைப்பற்றி எங்களுக்குக் கவலை மிகுதியாகிவிட்டது. உன்னை உன் கணவன் ஏதோ பெருந் துன்பத்துக்கு ஆளாக்கப் போகிறான் என்று எங்களுக்குத் தெரியவந்து, உன்னைக் காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று நாங்கள் ஆராய்ந்தோம். அவன் தூங்கும்போது இந்த மாய விளக்கின் உதவியால் அவன் முகத்தைப் பார்த்துவிடு. எல்லாத் துன்பங்களும் விலகிப்போம். உன்பேரில் எங்களுக்குள்ள அன்பால் நாங்கள் பெரிதும் வருத்தப்பட்டு இதைப் பெற்று வந்திருக்கிறோம். இதை நீ உன் தலையணைக்கடியில் மறைத்து வைத்துவிடு. அவன் தூங்கின பிறகு அதை வெளியே எடுத்து ‘மாய விளக்கே ஏற்றிக்கொள்' என்று சொல்லு. விளக்குப் பொருத்தி வெளிச்சம் வந்துவிடும். உன்னை உன் கணவன் ஒன்றும் செய்ய முடியாது,” என்று கூறினார்கள்.

ளகிய மனது படைத்த மீனாள் அவர்கள் சொல்லை நம்பி, அவர்களுக்குத் தன் நன்றியையும் தெரிவித்துவிட்டு, விளக்கைத் தாவணியில் மறைத்துக் கொண்டு திரும்பிச் சென்றாள்.