பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

அப்பாத்துரையம் 40

-

அரண்மனை சேர்ந்ததும் அவள் தலையணையின்கீழ் அவள் அவ்விளக்கை மறைத்து வைத்தாள். நள்ளிரவில் அவள் கணவன் அயர்ந்து தூங்கும்போது அதை எடுத்து, 'மாயவிளக்கே ஏற்றிக்கொள்' என்றாள். மாயவிளக்குப் பொருத்திக் கொண்டது. பட்டப் பகல்போல் வீசிய அதன் வெளிச்சத்தில் மீனாள் தன் கணவன் முகத்தைப் பார்த்துவிட்டாள். விளக்கிலிருந்த எண்ணெய்த் துளி ஒன்று அவள் கணவன் முகத்தில் தெறித்தது. அவன் திகைத்து விழித்தெழுந்தான். மீனாள் தன் முக அழகை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

"ஐயோ, ஏனிப்படிச் செய்தாய்?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் அவன் கேட்டான். அதே நொடியில், எல்லாம் அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டன. மீனாள் முன்பு உடுத்தியிருந்த கந்தல் உடையில் மரஞ்செடிகளுக்கிடையே பச்சிளங் குழந்தையுடன் தான் தன்னந்தனியாய் இருப்பதைக் கண்டாள். ஒரு மாதத்துக்கு முன்தான் அவளுக்கு அந்த அழகான குழந்தை பிறந்திருந்தது.

குளிரும் அச்சமும் வாட்ட மீனாள் குழந்தையும் கையுமாக நடுங்கிக்கொண்டே தட்டித் தடுமாறித் தன் பழைய குடிசைக்கு வந்து சேர்ந்தாள். வஞ்ச மனம் படைத்த அக்காள்மார் இருவரும் அவளைக் கண்டபடி ஏசிப்பேசி அடித்து விரட்டிவிட்டனர். மீனாள் பல நாள் பட்டினியும் பசியுமாகப் பச்சைக் குழந்தையுடன் இடுவார் பிச்சையை ஏற்று உண்டு பனியிலும் வெயிலிலும் உழன்று திரிந்து வெகு தொலை நடந்தாள். கால் கடுத்து மனஞ் சோர்ந்து இனிச் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணத்தில் அவள் ஒரு படிக்கட்டில் வந்து படுத்தாள். அது அந்த ஊர் அரசியின் அரண்மனைப் படிக்கட்டு, அப்போது வெளியே வந்த அரசியின் தோழி ஒருத்தி கைப்பிள்ளையுடன் களைப்பாகப் படுத்திருந்த மீனாள்மீது இரக்கம் கொண்டு தன் அறைக்கு அவளை எடுத்துவரச் செய்து, பிள்ளைக்குப் பாலும் அவளுக்குச் சோறும் ஊட்டச் செய்தாள். பிறகு அயர்வுதீர இருவரையும் பட்டு மெத்தையில் படுக்க வைத்தாள்.

மீனாள் உடல் நலிந்து படுத்த படுக்கையாய் விட்டாள். அரசியின் தோழி இயன்றமட்டிலும் எப்போதும் அவள் அருகில் இருந்து அவளுக்கு உதவி செய்து வந்தாள். ஒரு நாள் நள்ளிரவில்