பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

(207

அவள் அப்படி அங்கே வந்தபோது அழகிற் சிறந்த இளைஞன் ஒருவன் அங்கே வந்து தொட்டிலில் கிடக்கும் குழந்தையை எடுத்துச் சீராட்டிக் கொஞ்சுவதையும், "ஐயோ, என் ஆசைக் கண்மணி, உன்னை என் தாயார் பார்த்து யார் என்று தெரிந்துகொண்டால் உன்னைத் தங்கத் தொட்டியில் பன்னீர்

ட்டுக் குளிப்பாட்டி, பொன்னும் மணியும் பதித்த நகைகள் அணிவித்து பூம்பட்டுடுத்தி வளர்ப்பாளே; கோழி மட்டும் கூவாதிருந்தால் நான் இங்கிருந்து போகவே நேரிடாதே" என்று மனம் வெதும்பிக் கூறுவதைக் கண்டாள். அவன் அதைச் சொல்லும்போதே கோழியும் கூவிற்று. இளைஞனும் உடனே மறைந்து விட்டான்.

அதேபோல் பல நாளிரவிலும் நடந்து வரவே, தோழி அதை அரசியிடம் அறிவித்தாள். அரசி உடனே அதன் உண்மையை அறிந்துவிட முடிவு செய்தாள். ஊரிலுள்ள அத்தனை கோழிகளையும் அன்றே கொன்றுவிடக் கட்டளையிட்டாள். பறம்பு நாட்டுக் குடிகளுக்கு அரசியின் கட்டளை கொடுமையாகப் பட்டாலும் அரச தண்டனைக்கு அஞ்சி அப்படியே செய்தனர். அன்று இரவு நீல வானத்தில் விண்மீன்கள் வெள்ளிப் பொட்டுக்கள்போல் சுடர்விட்டு மினுமினுத்துக் கொண் டிருக்கும் நடுச் சாமத்தில் அரசி மீனாளின் படுக்கை அறைக்குச் சென்று திரைக்குப் பின்னால் மறைந்து நின்றாள்.

அவள் வந்த சிறிது நேரத்தில் அந்த அழகுருவான இளைஞன் வழக்கம்போல் வந்தான். தொட்டிலில் கிடக்கும் குழந்தையைக் குனிந்து கொஞ்சும்போது அவன் பிடரியில் இருந்த பெரிய மறுவை அரசி பார்த்து விட்டாள். வெகு காலமாகக் காணாமற் போய்விட்ட தனது அருமை மகன், இளவரசன், அவனே என்பதை அரசி உடனே அறிந்து கொண்டாள்.

பல ஆண்டுகளுக்கு முன் அரசிக்கு அந்த மகன் பிறந்ததும், மீனாளைக் கெடுத்த அதே சூனியக்காரி அரசியின் நல்வாழ்வைக் குலைப்பதற்காக ஒரு சாபம் இட்டிருந்தாள். நல்லவர்கள் வாழ்வதைக் காணப் பொறாத அவள், இளவரசன் அரண் மனையிலிருந்து மறைந்து போய்க் காட்டில் தன்னந் தனியாய் வாழ வேண்டும் என்றும், என்றைக்கு அவன் தாய் கோழி கூவுவதற்கு முன் அவனைக் கண்டு முத்தமிடுகிறாளோ