பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

||_ _

அப்பாத்துரையம் - 40

வேல்விழியாளும், மயில் நடையாளும் இளவரசன் தங்களைவிடத் தங்கையின் அழகை மெச்சிப் பாராட்டியதைக் கேட்டு மனம் புழுங்கினார்கள். அதனால் அவர்கள் மறுநாள் தேன்மொழியாளை நூல் நூற்க வைத்துவிட்டு, திரிதிரிப்பதை மயில்நடையாளும், பின்னல் வேலையை வேல்விழியாளும் செய்வதென்று முடிவு செய்தனர். “அப்படியாவது இளவரசன் வேல்விழியின் அழகைச் சிறப்பாகப் புகழமாட்டானா பார்ப்போம்,” என்று எண்ணினார்கள்.

மறுநாளும் அவ்வழியே வந்த இளவரசன் மணங்கமழும் மலர்களுக்கிடையே பெருமிதமாக வீற்றிருந்த அம்மங் கையர்களை ஏறிட்டுப் பார்த்துக் களி ததும்பிய குரலில் தன் கூட்டாளிகளிடம் பின்வருமாறு கூறினான்: "பின்னல் பின்னுபவள் அழகிதான்; திரிதிரிப்பவளும் அழகிதான்; ஆனால் நூல் நூற்கும் ஆரணங்குதான் என் மனதைக் கொள்ளை கொள்ளும் உயிரோவியம்." இதைக் கேட்ட தேன்மொழி வெட்கத்தால் தலைகுனிந்து மகிழ்ச்சியால் மனம் விம்மினாள். வேல்விழியும், மயில்நடையும் மீண்டும் பொறாமையால் மனம் வெதும்பினர். தங்கையின் பெருமையைக் குலைக்க மற்றொரு வழி காண முனைந்தனர்.

மூன்றாம்நாள் தேன்மொழியை உள்ளே தள்ளி இருந்து திரிதிரிக்கும்படி கூறிவிட்டு, தமக்கையர் இருவரும் முன்பக்கமாக உட்கார்ந்துகொண்டு நூற்பதிலும் பின்னுவதிலும் ஈடுபட்டிருந் தனர். இளவரசன் வரும் போது அவன் மனதைக் கவருவதற்காக முகத்தில் புன்சிரிப்பையும் வருவித்துக் கொண்டிருந்தனர். (உள்ளத்தில் பொறாமைத்தீ வாட்டும்போது முகத்தில் நல்ல சிரிப்பு எப்படி வரும்?) அப்படி முன்னேற்பாடுகள் செய்துங்கூட. இளவரசன் வழக்கம்போல் தேன்மொழியின் அழகைத்தான் மிச்சமாகப் பாராட்டினான். "நூற்பவளும் அழகிதான்; பின்னுபவளும் அழகிதான்; ஆனால், உள்ளே தள்ளியிருந்து திரிதிரிக்கிறாளே அவள் தான் என் நெஞ்சம் கவர்ந்த பேரழகி, என்று அவன் கூறிச் சென்றான்.

55

அதற்குமேல் மேலும் பொறுத்துக் கொண்டிருக்கத் தமக்கையர் இருவருக்கும் முடியவில்லை. பொறாமையும், சினமும் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு வந்தன. தங்கையை எப்படி