பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214

அப்பாத்துரையம் 40

-

66

என்று கிளி பாடியதைக் கேட்டதும் தேன்மொழிக்குச் சினமும் அச்சமும் வந்து, பாதாளவயிரனிடம் ஓடிச் சென்று அதைக் கூறினாள். அவனோ, கண்ணே ஏன் அஞ்சுகிறாய்? திரும்பிப்போய் அந்தத் துடுக்கான கிளியின் வாலைப் பிடித்து உலுக்கி,

‘பச்சைக் கிளியே பவள மூக்கே

உன் தூளி இறகால் மெத்தை தைத்து உந்தன் உடையான் அரச குமாரன் தன்னை மணந்தே நான் மகிழ்வேனே'

என்று பதில் சொல்லு” எனக் கூறினான்.

தேன்மொழியும் அப்படியே போய்ச் சொன்னாள். தன்னை அவ்வளவு ஏளனமாகப் பேசி வாலையும் பிடித்து உலுக்கியதைப் பொறாத கிளி அடங்காச் சினத்தால் நெஞ்சு வெடித்து அங்கேயே இறந்துவிட்டது. கிளி திரும்பி வராததைக் கண்ட இளவரசன் மற்றொரு கிளியை வாங்கிப் பேசப் பழக்கினான். அதுவும் முந்தியதைப் போலவே தேன்மொழியின் பலகணிப் பக்கம் வந்து பாடிச் சிரித்தது. தேன்மொழியும் முன்போலவே எதிர்ப்பாட்டுப் பாடவே, அக்கிளியும் அங்கேயே சினத்தால் நெஞ்சு வெடித்து உயிர் விட்டது.

தனது இரண்டாவது கிளியும் திரும்பி வராததைக் காண இளவரசனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. மூன்றாவது கிளி ஒன்றை வாங்கி அதன் பின்னேயே காவலுக்குச் செல்வதென்று முடிவு செய்து அதைப் பின் தொடர்ந்தான். அதுவும் தேன் மொழியின் பலகணிப் பக்கம் போய்ப் பாடுவதை இளவரசன் கவனித்து நின்றான். தான் நெடுநாளாகத் தேடிக்கொண்டிருந்த கட்டழகி உயிரோடிருக்கக் கண்டு அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆறுதலும் ஏற்பட்டது.

தன் அழகைப் பாராட்டி அன்பைக் கவர்ந்து கொண்ட இளவரசனை மீண்டும் பார்த்ததும் தேன்மொழிக்கு உண்டான மகிழ்ச்சியை என்னவென்பது! உச்சிப் பொழுதாதலால் பூதம் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்தது. இளவரசன் பலகணிப் பக்கம் நெருங்கி வந்து தேன்மொழியிடம் எல்லா விவரமும்