பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

அப்பாத்துரையம் 40

-

கவரிமானின் கொம்புகளிரண்டும் பொன் மயமானவை. அவைமீது வெயில் படும்போது கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் அவை மிளிரும். அக்கொம்புகளின் கூர் முனையில் இரண்டு ஒளிர் மணிகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். எனவே, இரவிலும் பகலிலும் அத்தங்கக் கவரிமான் எங்கே நின்றாலும் கொம்பு முனைகள் விண் மீன்களைப்போல விட்டு விட்டு ஒளி வீசி மின்னிக் கொண்டிருக்கும். எவ்வளவு தொலைவில் உள்ளவர்களுக்கும் அது நிற்பது தெரியும்.

இமயமலைச்

சாரலில் வாழும்

எல்லோருக்கும்

அக்கவரிமானின் வரலாறு நன்றாகத் தெரியும்; யாரொருவர் அதைப் பிடித்து அதன் கொம்பையும் வால் கவரியையும் கைப்பற்றி வருகிறாரோ அவரே நந்திக் கொம்புக் குகையில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள நிதிக் குவியலுக்கு உரிமையுடையவர் ஆவார் என்பது வழி வழியாக அவர்கள் அறிந்திருந்த உண்மை தான். ஆனால், ஒரே அம்பில் வீழ்த்தினால்தான் அந்தக் கவரிமானைக் கைப்பற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். முதல் அம்புக்குத் தப்பி விட்டால், அல்லது சிறிதே காயம் பட்டால் அம் மாயமானின் இரத்தம் படியும் இடங்களில் எல்லாம் செங்குருதியிலும் சிவப்பான செங்கள்ளி முளைத்தெழுந்து விடும்; அக்கள்ளிப் பூவைத் தின்று வரும் அந்த மானின் வலிவும், சினமும் முன்னினும் பன்மடங்காகிவிடும். தன்மீது அம்பு விட்ட ஆளைக் குத்திச் சாய்ப்பதற்காக அது ஒரே தாவுதலாகப் பாய்ந்து வேல் முனைபோன்ற தன் கொம்பால் அம்பெய்தவன் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிடும்.

இதிலிருந்தே அந்தத் தங்கக் கவரிமானைப் பிடிப்பது அரிது என்பது உங்களுக்கு விளங்கும். எத்தனையோ பேர் ஏதோ ஆசையால் அதைப் பிடிக்கச் சென்றும், மலையுச்சியில் நின்று அந்த மாயமான் அவர்களைப் பார்க்கும்போதே வெருண்டு உயிர் தப்பினால் போதும், என்று ஓடிவந்திருக்கிறார்கள்.

எனினும், அதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மக்களிடையே வேரூன்றி நின்றது. நந்திக் கொம்பிலுள்ள அரும் கருவூலத்தின் மீதுள்ள விருப்புத்தான் அதற்குக் காரணம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இமயச்சாரல் வட்டாரத்தில்