பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

231

மூவருக்கும் விதி முடிய வேண்டியது தானே அவர்களில் யானும் ஒருவனல்லனோ! எப்படியாயினும் என்னுயிர் போகவே போகின்றது இப்போது என்ன செய்யலாம்? தன்னுயிர் நீத்தும் பிறர் உயிர்களைக் காப்பவன் நற்கதியடைவானன்றோ! ஆகையினாலே அவ்வூராளியின் கொடுஞ்செயலுக்கு யான் முந்திக் கொள்வேன். அவன் என் உடலைச் சோதித்துப் பார்த்து விட்டானானால் அவன் பேராசை அடங்கிப்போய்விடும். ஓருயிரை வீணே கொன்றொமென்று கழிவிரக்கங்கொண்டு தான் கொல்லவேண்டுமென்று வந்த அம்மூவரையும் கொல்லாமலே விட்டுவிடுவான். என்னோருயிரை இழந்து உடன்வந்த மூவருயிரையுங் காத்து, இனிவரும் பிறப்பிலாவது நல்வாழ்வு பெற இதுவே வழியாகும். சாவுக்குப் பயப்படுவானேன்; அஃது ஆறிலும் உண்டு, நூறிலும் உண்டு” என்பதே.

கைக்

பொழுது விடிந்ததும் ஊராளி கருவிகள் கொண்டு, அடைபட்டிருந்த நால்வரையும் வெளியிடத்துக்கு வரச்சொல்லி அவர் தம் உடலைச் சோதிக்கத் தொடங்கி னான். அப்போது நான்காமவன் ஊராளியை நோக்கி, அப்பனே! என் நண்பர்களின் வயிற்றை அறுக்கும்போது யான் என் கண்ணால் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால், ஆண்டவனே! முதன்முதல் என் வயிற்றைக் கீறிப்பாரும்; பிறகு அவர்கள் உடலைச் சோதியும்; இந்த என் பணிவான விண்ணப்பத்தைத் தாங்கள் அன்புகூர்ந்து

ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.

இவ்வேண்டுகோளுக்கு ஊராளி ஒத்துக்கொண்டு அவன் வயிற்றை முதலிற் கீறிக் குடர்களை யெல்லாம் உருவிச் சோதித்து, உடலெல்லாம் ஓரிடமும் விடாமல் அறுத்தறுத்துப் பார்த்து விட்டான். மாணிக்கமே காணோம். ஊராளிக்கு மட்டற்ற மன வருத்தம் உண்டாய் விட்டது. “குருவின் பேச்சைக்கேட்டுக் கோரவதை செய்துவிட்டேன். பறவையின் பேச்சைக் கேட்டுப் பேராசையாற் பிணிப்புண்டு தீராவருத்தம் வைத்துக்கொண்டேனே! பெருங்கொலை செய்து பெற்ற பயன் யாது? எண்ணம் ஈடேறிற்றா? இல்லையே இவன் தன் வயிற்றிற் போலவே அவர்கள் வயிற்றிலும் மாணிக்கங் காணப்போகிறதில்லை. நான் ஏன் கொலைமேற் கொலை செய்யவேண்டும். அப்படிச் செய்தாலும் பலன் யாதொன்றுங்

பாவத்துக்காளேனேன்.