பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232 ||_ ||_ _ _

அப்பாத்துரையம் – 40

காணப் போகிறதில்லை. இத்தகைய கொலை செய்வதற்கு னிமேல் என் மனமும் எண்ணாது; என் கையும் செய்யாது என்று இவ்வாறு எண்ணி ஒரு முடிவு செய்துகொண்டு மற்ற மூவரையும் நோக்கிப், "புண்ணியவான்களே! உங்கள் நண்பனைப் படுகொலை செய்ததற்காக உங்களை மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் மனங்கொண்ட இடத் திற்கு நீங்கள் போகலாம்" என்றான். உடனே அம்மூவரும் அவ்விடம் விட்டுச் சரேலென நடந்தார்கள். வழியில் தங்களுக்கு நேர்ந்த பேரிடையூற்றைக் குறித்துப் பேசலாயினர்.

அரசமகன்: நண்பர்களே! எவனோ ஒருவன், வழியில் வந்து சேர்ந்தான். முதன் முதல் அவன் தன்னுயிரை விடுவதற்குக் காரணமென்ன? அஃது எனக்கு விளங்கவில்லையே.

செட்டிமகன்: அவன் துணிச்சல் யாருக்கு வரும். உயிரை விட்டு உயிர்களைக் காப்பாற்றினான். அவனல்லனோ வீரசிகாமணி!

வாத்திமகன்: அவன் எப்படியோ நம்மிடம் மாணிக்கம் இருப்பதைக் கண்டு கொண்டிருக்கின்றான். தனது உயிர் எப்படியும் போய்விடும் என்று நினைந்து அவன் முதலில் தன்னுயிரைக் கொடுத்துவிட்டால் நமது உயிர் ஓர் வேளை தப்பினாலும் தப்பலாம் என்று எண்ணினான். எண்ணிப் புண்ணியஞ் சம்பாதித்துக் கொண்டான் என்றே தோன்று கின்றது.

மூவரும் இவ்வாறு பேசிக்கொண்டே நடந்துபோய் ஒரு

நகரை யடைந்து மாணிக்கங்களை விற்றுப்பெரும் பொருள் அடைந்தனர். அந்நகரின்கண் முதன்முதல் செட்டிமகன் வாணிபஞ் செய்யத் தொடங்கிப் பெரியதொரு வாணிபச் சாலையும் ஏற்படுத்தி நடத்தி, அறவழியில் கொடுக்கல் வாங்கல் செய்து பெரும் புண்ணிய வணிகன் எனப் பேரெடுத் தான். அரச மகன் அந் நாட்டுச் சேனையிற் சேர்ந்து படிப்படி யாகத் தளகர்த்தனானான். வாத்தியின் மகனோ கல்வியில் மேன்மேலுந் தேறிப் பெரு நாவலனாய் அந் நகர்க் கலாசாலை யில் சிறந்த சொற்பொழிவாளனானான். இவர்கள் மூவரும் அந்நகரின் கண் நன்கு வாழ்ந்து பேரும்புகழும் அடைய, இச்செய்தி இவர்கள் பிறந்த நகருக்கும் எட்டவே இவர்களுடைய தாய்தந்தையர்கள் இவர்களை வந்து கண்டு கூடிக்குலாவி, அளவளாவி, அகமகிழ்ந்தார்கள்.