பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

237

அநுபவித்தே தீரவேண்டும். ஐயா மன்னிக்கவும்; இவ்விடா வேதனையினின்று என்னை விடுவித்துவிட்டீர்; நான் வீட்டுக்குப் போகிறேன்.” என்று சொல்லியோடி மறைந்தான்.

இவன் இங்கே இவ்வாறிருக்கப் பொன் பெற்றவன், 'போனவன் இன்னுந் திரும்ப வில்லையே' என்று எண்ணிப் புறப்பட்டு மலைமேலேறி வந்தான். சில தூரம் நடந்து வந்ததும் சிறிது தூரத்தில் தலைமேற் சக்கரம் சுழல ஒரு மனிதனைக் கண்டு மிக்க வியப்படைந்தான்; அம் மனிதன் உடலெல்லாம் செந்நீர் பெருகிக் கொண்டிருக்கவும், மிக்க வேதனையோடு கதறிக் காண்டிருக்கவுங் கண்டு அச்சமுந் திகிலுங் கொண்டான். சிறிது கிட்ட செல்லவே அவன் தன் நண்ப நண்பனெனக் கண்டு கொண்டான். இவன் கண்ணீரொழுக அவனைக் கூப்பிட்டு, “நண்பனே இஃதென்ன!” என, அவன், “விதிவசம் என்கிறார்களே அதுதான் இது” என்று சொல்லித் தன் வரலாற்றையும் சக்கரத்தின் வரலாற்றையும் சுருங்க வெடுத்துச் சொல்லினான். பிறகு பொன்னாளன், 'பேராசை வேண்டாம், மேலும் மேலும் போகவேண்டாம். என்று சொன்னேனே! கேட்டாயா! வந்ததைப் பட்டுக்கொள்ள வேண்டியதுதானே! யார் தான் என்ன

செய்யலாம்; போய்வருகிறேன்." என்று சொன்னான். சக்கரக்காரன் அவனை மறித்து "நண்பா! என்னை இந்நிலையில் விட்டு விட்டுப் போவாயேயானால் உனக்கு நல்ல கதி கிடைக்குமா!” என்றான்.

கு

இதனைக் கேட்ட பொன்னாளன், “சொல்வது சரியே! ஆயினும், இயல்வது கரந்தால்தானே எனக்குப் பழியும் பாவமும்! உனக்கு என்னால் ஒன்றுஞ் செய்ய முடியாதே யான் இங்கிருப்பதனால் யாது பயன்? நீ படும் வேதனையை நான் பார்த்துக்கொண்டு மனம் புழுங்கி அழவேண்டியது தானே, உன்னுடைய அறிவுக் கேட்டால் உனக்கு நேர்ந்த தண்டனையை நீயேதானே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் நெருங்காமலே மிகமிக விரைவில் திரும்பி அவன் கண்ணுக்கு மறைந்து போய்விட்டான்.