பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. சிற்றாவின் சீற்றம்

பசுக்களில் சிற்றா ஒப்பற்ற பசு; சிறு பிள்ளைகள் அருகே சென்றால் கூடச் சும்மா நிற்கும். பால் கறக்கும் நேரம் தவறினால் அம்மா அம்மா என்று பால் கறப்பவனைக் கூவி அழைக்கும். இவ்வளவு பொறுமையுடைய சிற்றா முதலில் ஒரு தெறுதலையா யிருந்தது என்றால் யாராவது நம்புவார்களா?

ஆம், கன்றாயிருக்கும்போது பார்க்கவேண்டும். அதனைக் காட்டிற்கு மேயப்போகும்போது ஊர்மாடுகள் அத்தனைக்கும் முந்தித் தலைதெறிக்க ஓடுவதும் சிற்றாதான். திரும்பி வரும்போது எல்லாப் பசுக்களும் வந்த பின்னும் பின் தங்கி மாட்டுக்காரப் பையன் மருதப்பனுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டு துள்ளி வளைந்து வளைந்தோடி வருவதும் சிற்றாதான்.

தாய்ப்பால் மறக்கும் பருவம் ஆயிற்று. சிற்றாவுக்குக் கழுத்தில் பழுப்பான தோல்வார் இட்டு அதில் பொன்போல் பளபளப்பான பித்தளை மணி கட்டித் தூக்கியிருந்தது. புது வளையலிட்ட சிறு பெண்ணைப்போல் சிற்றாவுக்கு இது கலகலப்பாகவும் இருந்தது. தலையை ஆட்டும்போதெல்லாம் அதன் இனிய ஒலி கேட்டது கண்ட சிற்றா அடிக்கடி தலையை ஆட்டியும் ஓடி யாடியும் அதன் இன்னோசை கேட்டு மகிழ்ந்தது.

று

ஆனால் இன்பப் பொருளாகிய இந்த மணி ஓசையிலும் ஒரு சூது இருக்கிறது என்பது இரண்டு மூன்று நாட்களுக்குள் சிற்றாவுக்கு தெரியவந்தது. மந்தையைவிட்டு நல்ல புல் வெளியில் சென்று போட்டியில்லாமல் புல் கறிக்கலாம் என்று ஓடிய போதெல்லாம், இந்தப் பாழும் மணிஓசை கேட்டு மாட்டுக்கார மருதப்பன் தன்னைப் பிடிக்க ஓடி வந்ததைக் கண்டு சிற்றாவுக்கு மணி மீது வெறுப்பு ஏற்பட்டது. “மனிதர் இந்த மணியை நம்