பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(240

அப்பாத்துரையம் – 40

புலிதான் என்று நினைத்த சிற்றா விழுந்தடித்து ஓடிற்று நாய் சற்று நேரத்திற்குள் பின் தங்கிவிட்டது. ஆனால் சிற்றாவின் உள்ளத்தில் நாயின் அச்சம் விட்டபாடில்லை.ஆகவே சிற்றா நெடுந்தொலைவு ஓடி ஒரு பாறை ஏறித் தாவுகையில் அப்புறமிருந்த பாழ்ங் கிணறு ஒன்றினுள் விழுந்தது.

விழுந்ததாலுண்டான உடல் வலியைவிட நாய் அங்கு வந்து கொன்று விடுமே என்ற அச்சமே சிற்றாவுக்கு மிகுதி. அச்சம் நீங்கியவுடன் வெளிக்கிளம்ப முயன்றது; நாற்புறமும் வழியில்லை. நீர் வேட்கையால் கத்தவும் முடியவில்லை, முடியுமட்டும் வாய்விட்டு இரைந்து கொண்டும் முணுகிக்கொண்டும் அது வருத்தத்துடன் இருந்தது. மணியோசையின் முழுப் பயனும் ப்போதுதான் சிற்றாவுக்கு மனத்திற் பட்டது. இனி யாது செய்வது?

ஒரு

மருதப்பன் நெடுநேரம் சென்றுதான் சிற்றா காணாமற் போனதென்று அறிந்தான். அறிந்த அவன் காடும் மேடும் தேடினான். அவன் தந்தை அம்பலவாணனும் நண்பரும் வேறு மலையடிவாரம் முழுவதும் தேடினார்கள். அவர்களுடன் சென்ற மருதப்பன் சிற்றாவில்லாமல் வீட்டுக்குவர மனமில்லாமல் பாறையில் உட்கார்ந்து சிற்றாவை நினைந்து வருந்திக் கொண்டிருந்தான். அப்போது சிற்றாவின் குரல் போல் மெல்லென ஒர குரல் கேட்டது. உடனே சற்று உரத்து ஆவலுடன், “சிற்றா! சிற்றா!" என்று கத்தினான். இப்போது குரலும் சற்று உரத்துக்கேட்டது. அதனைப் பின்பற்றி உற்று நோக்கப் பாழும் கிணற்றினுள் சிற்றா செயலற்றுக் கிடப்பதைக் கண்டான்.

தொலையில் போகும் தந்தையையும் நண்பர்களையும் மருதப்பன் கைகொட்டி அழைத்து அவர்களுதவியால் சிற்றாவை எடுத்துச் சென்றான். பல வாரம் சிற்றா படுக்கை யில் கிடந்தது. சிறு கன்றானதால் விழுந்து முறிந்த எலும்புகள் விரைவில் சேர்ந்தன. சிற்றா அதன்பின் மணியில்லாமலே மந்தைக்கு அடங்கி நடந்ததுமட்டுமல்ல, வேறு கன்றுகள் ஏதெனும் தப்பியோட முயன்றால் கூடத் தன் கொம்பினால் முட்டுவதாக அச்சுறுத்தி மந்தைக்குள் துரத்திவிடும்.