பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

அப்பாத்துரையம் – 40

ஆனால், உண்மையில் அவள் செய்த முடிவினால் எல்லாம் கட்டுப்போயிற்று என்றுதான் சொல்லவேண்டும். பிள்ளை களுக்குப் பதினைந்து நாட்களும் பதினைந்து நொடிகளாகக் கழிந்தன. இன்னும் திங்கட் கணக்கில் இருக்க முடியாவிட்டாலும், விடுமுறைக்கால முழுமையுமாவது அங்கே தங்க அவர்கள் விரும்பினார்கள். அதோடு. தந்தையின் உடல் நிலையிலும் அப்பதினைந்து நாட்களுக்குள் எவ்வளவோ மேம்பாடு காணப்பட்டது.ஆகவே, இன்னும் ஒரு திங்கள் குற்றாலத்திலேயே தங்குவது என்று எல்லாரும் முடிவு கட்டினர். ஆயினும் அவர்கள் முடிவு கைகூடாமல் போயிற்று. அவர்கள் முதலில் பேசிய காலமுடிவிலிருந்து இரண்டு திங்கள் அவ்விடத்தை வேறு யாரோ பேசி முடித்துவிட்டார்கள். பக்கத்திலெல்லாம் கற்பகத்தம்மாளும், அவள் வேலையாளும் சென்று தேடியும் வேறு வீடும் அகப்படவில்லை ஆகையால் வேண்டா வெறுப்பாக அனைவரும் குற்றாலத்தலிருந்து விடைகொள்ள வேண்டிவந்தது.

66

தந்தை பச்சைமாமலையாருக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட மன உளைவைக் கேட்கவேண்டியதில்லை. பச்சை மாமலை, “சிலரது ஊதாரித்தனத்தினால் ஏற்படும் கெடுதியை விட இந்தக் கற்பகத்தின் மட்டற்ற சிக்கனத் தினால் வரும் கேடே மிகுதி" என்று முணுகிக்கொண்டார். கதிரொளியும், “அம்மா எப்போதும் இப்படித்தான். காசு காசு என்று கடைசியில் காசும் இழந்து காரியமும் இழப்பதுதான் அவள் வழக்கம்." என்று குறைகூறினால் மற்றப் பிள்ளை களும் மனம் வெதும்பிக் களை இழந்து வாடி நின்றனர். சேந்தன் மட்டும் அப்போதும், “போகத்தான் போகிறோமே இந்தக்கடைசி நாளையாவது காலாரத் திரிந்து கழிப்போமே" என்றான். தற்காலிகமாக அதுவே சிறப்புடையது என்று எல்லாருக்கும் தோற்றிற்று. எனவே, அன்று காலைநேர முழுமையும் அவர்கள் அருவியோரங்களிலும் குறிஞ்சி நிலப் பரப்புகளிலும் நெடுநேரம் சுற்றித் திரிந்தனர். உச்சி உறைக்கு நேரம் தாழ்த்து மூன்று மணி யளவிலேயே வந்தனர்.

மாலை நேரத்தை எப்படிக் கழிப்பது நல்லது, என்று அவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். புதிய மலைச்சாலையின்