பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244

அப்பாத்துரையம் – 40

பொறி சுழல்வது கண்டு, அங்கே சிறு நூலின் வழி ஓடும் நீர் இருக்கும் என்று அதனுள் சென்றார்கள். எண்ணியபடி அங்கே அழகிய பூஞ்சோலையும், அதற்குத் தண்ணீர் பாயும் அழகிய சிறு நீரோடையும் இருந்தன. பிள்ளைகள் அதனருகில் சென்று உட்கார்ந்து நீர் அருந்தினார்கள். அவர்களும் நீர் அருந்திக் கனிகளைப் பரப்பிவைத்துத் தின்னத் தொடங் கினார்கள். அவ்வளவில் ஒரு பெரிய தாட்டையன் அப்பக்கம் ஓடிவந்து கனிகளைப் பறித்துக்கொண்டு அவர்கள்மீது சீறினான். என்ன துணிச்சல் உங்களுக்கு, இதனுள் நுழைந்து பழங்களைப் பறித்து இங்கேயே தின்ன," என்றான் அவன். கதிரொளி, “பழம் இங்கே பறித்ததில்லையே, விலைக்கல்லவா வாங்கினோம்!” என்றாள்.

66

அவன், "யாரிடம் இந்தப் பொய். விலைக்கு வாங்கிய வர்களா இந்தச் சோலை தேடிவந்து தின்னவந்தீர்கள்?” என்று சொல்லிக்கொண்டு கையிலகப்பட்ட சேந்தன் செவியைத் திருகினான்.சேந்தன்.“அடே அய்யா, அப்பா” என்று கூவினான். வேலுவும் நெல்லையும் ‘அண்ணா அண்ணா' என்ற கதறினர்.

அச்சமயம் சற்று முன் அவர்கள் கண்ணுற்ற மிதி வண்டிக்குரிய மாது 'சரிங் சரிங்' என்று மிதி வண்டியின் மணியை அடித்து கொண்டு உள்ளே வந்தாள். அவள் முதலில் பிள்ளைகள் யார் என்று கவனியாமலே அம் மனிதனைப் பார்த்து,“அவர்களை ஏனடிக்கிறாயடா?" என்று கேட்டாள். அக் கேள்வியின் எடுப்பிலிருந்து அவன் வேலைக்காரன் என்று அவள் தான் அத் தோட்டத்திற்கும் அதனை ஒட்டியுள்ள மாளிகைக்கும் உரியவள் என்று பிள்ளைகள் எண்ணினார்கள்.

வேலைக்காரன், "இவர்கள் துணிந்து தோட்டத் திற்குள் வந்ததுடனல்லாமல், நம் கொய்யாக் கனிகளைப் பறித்து அங்கேயே அச்சமின்றித் தின்று கொண்டிருக்கிறார்கள். அதனை விலைக்குவாங்கினோம் என்று என்னைவேறு ஏமாற்றப் பார்க்கிறார்கள்.” என்றான்.

அவள்,"என்னடா, இவ்வளவு சிறிய பிள்ளைகள் அப்படித் துணிந்து பறிப்பார்களா, பறித்தாலும் இங்கே வைத்துத் தின்ன எண்ணுவார்களா? நீ முன்பின் ஆராயாது அவர்களை கண்டித்தது தவறு. நான் கண்டது நல்லதாயிற்று. அவர்கள்