பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

1247

அழகிய மாப்பிள்ளைப்பூச்சி ஒன்று கிடைத்தது. மணவினை சிறப்பாக நடந்தேறியது.

மாதம் ஒன்று கழிந்தது. பெண்ணை பல்லக்கிலேற்றி மாமியார் வீட்டிற்குத் தாய் பூச்சி அனுப்பிவைத்தது. பல்லக்கும் மாமியார் வீட்டு வாயிலின்முன் வந்து நின்றது. முத்துப்போன்ற பற்கள் வெளியே தெரிய சிரித்துக் கொண்டேபெண்,பல்லக்கைவிட்டு கீழே இறங்கிற்று.அப்பொழுது வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த அதன் மைத்துனப்பூச்சி ‘அடடே, அண்ணியாரின் பல் பாகல் விதை போலிருக்கிறதே!” என்று விளையாட்டாகக் கூறிற்று. அதைக் கேட்டதும் பெண்ணுக்குக் கோபம் பொங்கியது. எனினும் வீட்டினுள் காலெடுத்து வைத்ததும் வைக்காமலும் இருக்கும்பொழுதே சண்டையிடுதல் கூடாதென்று ஒருவாறு அது தன் கோபத்தை அடக்கி கொண்டது. அன்றைப் பொழுது ஒருவாறு கழிந்தது.

66

1

மறுநாள் காலையுணவிற்காகத் தோசை சுட வேண்டி யிருந்தது. பெண் அடுப்பின் மீது தோசைக்கல்லை ஏற்றி மா இருந்தவரையில் தோசைகளைச் சுட்டு அடுக்கிற்று. அதற்கு வேண்டிய துவையலையும் அரைத்து வைத்தது. கடைசியில், மிஞ்சிய மாவைத் தோசைக்கல்லில் ஊற்றிவிட்டுத் தெருப் புறம் வந்து நின்றது. சிறிது நேரமானதும், கல்லிலிருந்த தோசை காந்துவதைக் கண்டு மாமியார்ப்பூச்சி சட்டுவத்தை தேடிற்று; அகப்படவில்லை. தெருப்புறம் வந்து பெண்ணைப் பார்த்து, “பெண்ணே, இலஞ்சியமே! நீ ஆண்ட சட்டுவத்தைத் எங்கே வைத்தாய்?" என்று அன்புடன் கேட்டது. அவ்வளவுதான்? வந்துவிட்டது, பெண்ணிற்குக் கோபம் மூக்கின்மேல். "சமையற்காரியைக் கேட்பதுபோல், 'சட்டுவம் எங்கே' என்று என்னை மட்டு மரியாதையில்லாமல் எப்படிக் கேட்கலாம்? அதுவும், தெருவில் நிற்கும் போதா வந்து கேட்பது? நேற்று என்னடாவென்றால் 'என் பல் பாகல் விதையைப் போலிருக்கிறது' என்று மைத்துனன் பழித்தான். போனாற் போகிறதென்று பொறுத்துக்கொண்டேன். இன்று தெருவில் வந்த ‘சட்டுவத்தை எங்கே வைத்தாய்!" என்று மாமியார் கேட்பதா? என்னதான் மாமியாராயிருந்தாலும் இவ்வாறு மானங்குலைக்கலாமா? இனி ஒரு நொடிப்பொழுதுகூட இங்கே தங்கமுடியாது. வாழந்தால்