பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248) ||_

அப்பாத்துரையம் – 40

மானத்தோடு வாழவேண்டும். மானமிழந்த பின் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? இனிச் செத்தாலும் சாவேனேயன்றி இவ் வீட்டின் பக்கந் திரும்பிக்கூடப் பாரேன். யார் என்ன சொன்னாலும் சரி” என்று கூச்சலிட்டது. கூச்சலிட்டு முடித்த பின் பல்லக்குப் போகினை நோக்கி “எட்டா சிங்கம், பல்லக்கை; விடடா பிறந்தகத்திற்கு!” என்று கட்டளையிட்டுப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டது.பல்லக்கும் புறப்பட்டு விட்டது.

வழியிலிருந்த குளக்கரை யொன்றில் கணவன் பூச்சி எண்ணெய் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அதைக் கண்டதும் குளத்திற்குநேரே பல்லக்கை நிறுத்தச் சொல் லிற்று பெண்பூச்சி. பல்லக்கு நின்றது; கதவு திறந்தது.

66

உள்ளே யிருந்தபடியே, எண்ணெய் தலையழகா, இருகாதும் பொன்னழகா! உன்னாச்சி என்னை உருவவுருவச் சொன்னாளே! என்று பெண் உரக்கக் கூறிற்று. கூறி முடிந் ததும் கதவு மூடிக்கொண்டது. பல்லக்கு மீண்டும் புறப்பட்டு விட்டது.

வீடுவந்து சேர்ந்ததும் பெண்பூச்சி இறங்கி வீட்டினுட் சென்றது. தாயினிடம் நடந்தவற்றை யெல்லாம் கூறித் தேம்பித் தேம்பியழுதது. தாய்ப்பூச்சிக்கு உண்டான கோபத்

திற்கு அளவேயில்லை.

"என்ன தலைமுழுகிப் போய்விட்டது என்று ஊர் திரும்பிவிட்டாய்! இந்த அற்ப காரியத்திற்காக மனம் புண்ணாகி இனிப் புக்ககம் திரும்புவதில்லையென்று முடிவு கூறி வந்து விட்டாயோ! முளைத்து இன்னும் இரண்டிலை சரியாக வெடிக்கவில்லை. அதற்குள் இத்தனை செருக்கா? நான் உன்னை உண்டாயிருக்கையில் மண்கரைச்சான் காலம் வந்துவிட்டது. எல்லோரும் வரிச்சற் குடிக்கு இடம் மாற வேண்டியதாயிற்று. வழியில் ஒரு மகிழமரம் இருந்தது. அதனடியிற் செல்லும்போது, கொத்தோட ஒரு மகிழம் பூ இற்று என் மார்பில் விழுந்தது. வயிறும் பிள்ளையுமாக இருந்த எனக்கு எப்படியிருக்கும்! துக்கம் தொண்டையை அடைக்க, உன் தந்தையிடம் தெரிவித்தேன். நொந்ததா நோவவில்லையா? என்று கூட உன் தந்தை