பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

249

கேட்கவில்லை. இதைவிட மானக்கேடு வேறு என்ன வேண்டும்? அப்படியிருந்தும் அவ்வளவையும் பொறுத்துக்கொண்டேன். எப்படியாவது நம் குடித்தனம் நன்றாக இருக்கவேண்டுமே என்று கோபத்தை அடக்கிக்கொண்டேன். உன்னையும் பெற்றேன். ஆண்டுகள் பல வளர்த்தேன். நல்ல மாப்பிள்ளையைத் தேடி மணமுடித்து வைத்தேன். இப்படி யெல்லாமிருக்க, நீ என்னடா என்றால், “சட்டுவமெங்கே? என்று மாமியார் கேட்டதால் குடி முழுகி விட்டதாக நினைத்துவிட்டாய்போலும். உடனே, புத்தகத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டாய். இனி அந்தப் பக்கந் திரும்பமாட்டேன் என்று உறுதி கூறிவிட்டு வந்ததாக என்னிடம் நாக்கில் நரம்பில்லாதவள்போல் அச்சமின்றிச் சொல்கிறாய். உன்மேல் குற்றமில்லை. எல்லாம் நான் சிறு சிறுவயதில் உனக்குக் கொடுத்த செல்லத்தினால் விளைந்த கேடு. உன்னைச் சிரிப்பதுமன்றி, உன்னைப் பெற்ற என்னையுமன்றோ உலகம் பழிக்கும். மூக்கு முனையில் இப்படிக் கோபத்தை வைத்திருக்கிற நீ எத்தனைநாள் வாழலாமென்று புக்ககம் துறந்து பிறந்தகம் வந்தாய்? குடிப்பழி தேடிய உன்னை ஒரே மிதியாக மிதித்தால் என்ன? என்று கூறியபடியே தாய், காலைத் தூக்கி மிதித்தது. செருக்கு மிகுந்த பெண்பூச்சி நசுக்குண்டு மாய்ந்தது.

திவ்வாறாக, பல்லக்கிலிருந்தபடி தன் மனைவி சொல்லிச் சென்ற சொற்களைக் கேட்ட கணவன் பூச்சி, தலைகூட முழுகாமல், நேரே வீட்டிற்கு ஓடிற்று. “என் தாயே, என்னாச்சி, என் தேவியை என்ன சொன்னாய்?” என்று நெஞ்சந் துடிக்கத் தன் தாயைக்கேட்டது. மிகுந்த வருத்தத்துடன் நடந்ததை மாமியார்ப் பூச்சி கூறிற்று. உடனே கணவன் பூச்சி சினந்தணிந்து, தன் தாயாரின் அடிபணிந்தது. தாயே, என் பிழையைப் பொறுத்தருள். அவ்வளவு செருக்குப் படைத்த மனைவி எனக்கு வேண்டா! அவளை இனி தான் திரும்ப அழைக்கமாட்டேன்." என்று முடிவாகக் கூறி விட்டது.

னி