பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

(251

ஒரு நாள் அது மேய்ந்து கொண்டிருக்கையில் அதற்கு நீர் வேட்கை உண்டாயிற்று. நீர் வேட்கையைத் தணிப்ப தற்காக அது ஓர்ஏரிக்குச் சென்றது. ஏரி நீர் தெளிவாக இருந்ததனால் அதன் நிழல் அதில் நன்றாய்த் தெரிந்தது. அதன் கொம்பு மிக அழகாயும் கால்கள் மிக மெல்லியவை யாயும் இருப்பதை அது கண்டது. ஆம், ஆம், நமது கொம்பு எவ்வளவு அழகுடையன. இந்த அழகையெல்லாம் நம் முடைய கால்கள் கெடுக்கின்றனவே என்றுதன் கொம்பு களை மெச்சிக் கொண்டும் கால்களை இகழ்ந்துகொண்டும் இருந்தது. அப்போது திடீரென்று வேட்டைக்காரர்கள் வந்துவிட்டார்கள். உடனே அது வெகு விரைவாக ஓடத் தொடங்கிற்று. வேட்டைக்காரர்கள் ஏறியிருந்த குதிரை களும் விரைவாகப் பின்தொடர்ந்தன. கலைமான் காற்றாய்ப் பறந்து சில நாழிகைக்குள் நூற்றுக்கணக்கான கல்தொலை ஓடிவிட்டது. குதிரைகள் எவ்வளவோ தொலை பிந்தி விட்டன,ஆயினும் பின் தொடர்வதை விடவில்லை.

வேட்டைக்காரர்களிடமிருந்து மான் நெடுந்தொலை யில் சென்று விட்டது. சென்றும் என்ன பயன்? அதன் கொம்பு திடீரென்று ஒரு முட்செடிக்குள் மாட்டிக் கொண்டது. மான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தது; ஆனால் முடியவில்லை. அதற்குள் வேட்டைக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஐயோ, ஏழை மான் என்ன செய்யும்? அது இகழ்ந்த கால்களால் அது எவ்வளவோ தொலைவரையில் விரைந்தோடிச் சென்றது. மிக அழகியதென்று அது மெச்சின கொம்பே கடைசியில் அதற்கு எமனாயிற்று.

வேட்டைக்காரர்கள் மானை அதன் இறைச்சிக்காக மட்டும் அன்று; அதன் கொம்புக்காகவே வேட்டையாடினர். மான் கொம்பினால் கத்திப்பிடி, பொத்தான் முதலிய பல பொருள்கள் செய்யப்படும். ஆகையால், அழகான அதன் கொம்பே அதனை இறந்துபோகும் படி செய்தது.

ஆகையால், அழகால் மயங்கி அழியக் கூடாது. அழ கில்லாத பொருளும் ஆபத்திற்கு உதவும்.