பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. எல்லாம் நன்மைக்கே

உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். ன்பத்தை விரும்புவதும் துன்பத்தை வெறுப்பதும் மக்க ளுடைய இயற்கை. துன்பத்தை வெறுப்பதால் அத்துன்பம் நம்மைவிட்டு நீங்குமா? ஆதலால் துன்பத்தை உலக இயற்கை என்று எண்ணல் வேண்டும். அமைதியோடு ஏற்று மனங் கலங்காத தன்மையை நாம் அடையப் பழகவேண்டும். மனக் கலக்கம் மேன்மேலும் துன்பத்தை மிகுவிக்கும் அல்லவா? மனக்கலக்கம் இல்லாமல் இருப்பது எப்படி? நம் அறிவா லேயே அது கூடும். அறிவுடையவன் துன்பத்தைக் கண்டு அஞ்சமாட்டான். அத்துன்பத்தைத் தீர்ப்பதற்கு உரிய வழியை ஆராய்ந்தறிவான். அறிவில்லாதவன் துன்பத்தைத் தீர்ப்ப தற்கு வழி அறியாதவனாய்க் கலங்குவான்.

நமக்கு இன்பம் வந்தாலும் நாம் அளவு கடந்து மகிழ்தல் கூடாது.மனத்தை அடக்கி மகிழ்ச்சியை ஏற்றல்வேண்டும்.இப்படி இருந்து கொண்டுவந்தால் நமக்குத் துன்பம் வந்தாலும் நம்முடைய மன அடக்கத்தால் அத்துன்பத்தைக் குறைக்கலாம்.

நமக்குத் துன்பம்போன்று தோன்றுபவை நமக்கு இன்பம் கொடுப்பதும் உண்டு. தாய் தன் மகனுக்கு மருந்து கொடுப்பது துன்பமாகத் தோன்றுகிறதல்லவா? அதனால் உடலுக்கு நன்மையே உண்டாகிறது. தந்தை தாய் ஆசிரியர் கள் சில சமயங்களில் பிள்ளைகளைக் கடுமையாய்ப் பேசுவது துன்பமாகத் தோன்றுகிறது. அதனால் நன்மை யுண்டாவதைப் பிள்ளைகள் பின் உணர்வார்கள்.இதேபோல் கடவுள் சில சமயங்களில் சில துன்பங்களை மக்களுக்குக் கொடுக்கிறார்.பிறகு அத்தீமையால் நன்மையும் உண்டாகிறது.

ஓர் ஊரில் அகிபாய் என்னும் மகம்மதிய ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவர் மகம்மதியர்களுக்கு அறிவு புகட்டி வந்தார். அவர்