பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

259

மொழிகளே என்பதை அவன் நன்கு உணர்ந்தான். "இந்த நிலைமையை நான் விரைவில் போக்குகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். எப்படியும் பணம் திரட்டிக்கொண்டு விரைவில் வருகிறேன்” என்றான்.

மலடி ஒரேயடியாக மூவிரட்டையாகப் பிள்ளைகளைப் பெற்றாற் போன்ற அதிர்ச்சியும், கவலையும் பைந்தொடியை வாட்டின. “நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் இங் கிருந்து முடிந்த அளவு சற்று உழைத்தால் போதும். உங்களை விட்டுத் தனியாய் இருக்கவும் எனக்கு விருப்பமில்லை” என்றாள் பைந்தொடி.

திருமணத்துக்குப்பின் முதல் தடவையாக அவன் அவளிடம் கனிவுடன் பேசினான். “நீ கவலைப்டவேண்டாம். பைந்தொடி! நான் கூடிய விரைவில் வந்துவிடுவேன். உன் கணவன் என்ற மதிப்பை விரைவில் வந்து காப்பேன். நீ நாளை எண்ணிக் கொண்டு இரு. நீ எதிர்பார்ப்பதற்குள் வந்து உன்னை நன்னிலைப் படுத்துவேன்” என்று தேற்றி இன்மொழி கூறிச்சென்றான்.

தன் ஊரில் உழையாதவன் இப்போது ஊர் ஊராக சென்று உழைத்தான். விரைவில் வீடு திரும்பும் ஆர்வத்துடன், மிகுதி உழைத்தான்; மிகுதி அலைந்தான். சிறுகச் சிறுகச் செலவு செய்து, மிகுதி மீத்தான். ஆனால், அவன் திருத்தம் கண்டு தெய்வம் மகிழ்ந்திருக்க வேண்டும். அவன் நீண்ட நாள் உழைக்கத் தேவையில்லா நிலையை ஒரு சிறு நிகழ்ச்சி ஏற்படுத்திற்று.

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு அவன் காட்டு வழியாகச் சென்றான். அன்று வழக்கத்தைவிட வழி தொலை மிகுந்ததாக இருந்தது. இரவில் அவன் காட்டி காட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. ஒரு கோணற் பனைமரத்தடியில் அவன் தன் பணிக்கலப் பெட்டியுடன் படுத்து உறங்கினான்.

அந்த பனைமரத்தில் ஒரு பனை மரப்பூதம் குடி கொண் டிருந்தது. பகலெல்லாம் அது தன்னை ஒரு ஒரு ஓலை யாக்கிக்கொண்டு, பனை ஓலையுடன் பனை ஓலையாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இரவு வந்ததும் அது பனைமரப் பூதமாக முழு உருவெடுத்தது.அச்சமயம் அதன் உடல் ஒரு பனைமரத்தளவு நீண்டு உயர்ந்தும் தலை பனை மண்டை