பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




260

அப்பாத்துரையம் – 40

அளவு பெருத்தும் இருந்தன. அதன் கைகள் அரைப்பனை மரம் நீளமும் பருமனும் உடையனவாய் விளங்கின.

நள்ளிரவு கழிந்தவுடன், பனைமரப் பூதம் இறங்கி வந்தது. முழுவுருவுடன் நின்று, பண்ணனை நோக்கி அலறிற்று. பண்ணன் கண்ணை விழித்துப் பார்த்தான். பூத உருவைக்கண்டு அவன் உடல் முழுவதும் நடுங்கிற்று. ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதற்கு அவன் இயற்கையான சோம்பல் மட்டும் காரணமன்று. சமயத்துக்கேற்ற அறிவமைதியும் அதற்குத் துணைநின்றது. அவன் மெல்லப் பூதத்தை ஏற இறங்கப் பார்த்தான்.

பூதம் மீண்டும் அலறிற்று. “எழுந்திரடா, மடப்பயலே, இதோ நான் உன்னை விழுங்கப் போகிறேன்” என்றது அது.

அவன் தன் அச்சத்தை வலிந்து அடக்கிக் கொண்டு. ஆர்ந்தமைந்து பேசினான். “நீயா என்னை விழுங்கப் போகிறாய்? நன்று நன்று! நான் இங்கு வந்திருப்பதே எதற் காக என்பதை அறியாமல், என் கையில் வந்து சிக்கினாய்? இதோ இன்றிரவே என் பையில் உன்னைப் போலவே ஒரு பூதத்தைப் பிடித்து அடைத்திருக்கிறேன். உன்னோடு உருப்படி இரண்டாயிற்று. ஓர் இரவுக்கு இது போதும், பையிலிருக்கும் உன் தோழனை நீயே பார்?" என்றான்.

பூதம் பைக்குள் பார்வையைச் செலுத்திற்று.

பண்ணன் தன் அம்பட்ட வேலைக்காக வைத்திருந்த முகக்கண்ணாடியை நிமிர்த்திக் காட்டினான். பூதம் தன் நிழலையே கண்டு மற்றொரு பூதம் என்று நினைத்தது. அதன் பனையளவு உயர்ந்த கால்கள் நடுங்கின. குரல் கரகரத்தது. அது ஓடத் துணிந்தது.

பண்ணன் அதை எட்டிப் பிடிப்பவன் போல் எழுந்தான். பூதம் அதன் நெடிய உடலை வளைத்து அவனை வணங் கிற்று. "நான் தெரியாமல் உன்னருகே வந்துவிட்டேன். அப்பனே! என்னை விட்டுவிடு. உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் தருகிறேன். எப்போது என்ன வேண்டுமானாலும் கொடுப்பேன்!” என்றது.