பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

261

"பனை மண்டையா! என்னை ஏமாற்றவா எண்ணு கிறாய்? பூதங்கள் சொல்லை யார் நம்புவார்கள்? காரியத்துக்கு எதுவும் சொல்லிப் பின் ஓடி விடுவது தானே உங்கள் வழக்கம்! பேசாது என் பையில் இடம்பெற்றுவிடு. வேறு வழியில்லை” என்று பண்ணன் மீண்டும் அதட்டுவதாகப் பாவனை செய்தான்.

66

பனைப்பூதம் முன்னிலும் கெஞ்சிற்று என்னை இங்கேயே தேர்ந்து பாருங்கள். நான் ஒரு கணத்துக்குள் இங்கிருந்தே ஆயிரம் பொன் வரவழைத்துத் தருவேன். அதன் பின் விட்டு விடுங்கள். என்ன வேண்டுமானாலும் அதன் பிறகு கூடத்தங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்." என்று மீண்டும் பணிவுடன் கேட்டுக் கொண்டது.

"சரி, சொன்னபடி இந்த இடத்தில் நின்று கொண்டே ஆயிரம் பொன் வரவழைத்துக்கொடு அப்புறம் பார்ப்போம்” என்றான் பண்ணன்.

பூதத்தின் கால்கள் அங்கேயே நின்றன. ஆனால், கைகள் பனைமரத்தை வேருடன் பிடுங்கின. அதனடியில் ஒரு புதையல் இருந்தது. பூதம் அதை எடுத்து, அதிலுள்ள ஆயிரம் பொன்னை எண்ணிக் கொடுத்தது. பண்ணன் ஓரளவு மனம் அமைந்தவன் போலப் பேசினான்.

"சரி, நீ அவ்வளவு மோசமான பூதமல்ல, அருகே குறுங்குடி என்று ஓர் ஊர் இருக்கிறது. அதில் என் வீடு தென்கோடியில் இருக்கிறது. முன் நிற்கும் வேப்பமரத்தால் அதை நீ அடையாளம் கண்டுகொள்ளலாம். நாளை ஒரு நாள் இரவுக்குள் நீ அதன் பின்புறம் ஆயிரம் கலம் நெல் கொள்ளத்தக்க பத்தாயம் கட்டவேண்டும். அந்த இரவுக்குள்ளேயே அது நிறையும்படி நெல்லும்கொட்டவேண்டும். நெல் நல்ல மணி நெல்லாய் இருக்க வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை?” என்று கண்டிப்பாகக் கூறினான்.

“அவ்வாறே கட்டாயம் செய்கிறேன். ஐயனே! அதில் ஒரு சிறு பிசகு நேர்ந்தாலும் தண்டியுங்கள்!” என்று கூறிப் பூதம் விடைபெற்றுக்கொண்டது.

பண்ணன் ஆயிரம் பொன்னைக் கந்தையில் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டான்.