பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

273

நோக்கினாள். தன் கணவனையே உரித்து வைத்தாற்போல இன்னொருவன் எங்கிருந்து வந்தான். இது என்ன மாயம்?” என்று குணமாலை குமுறினாள். தெய்வக் கோபம் தீரவில்லை என்பதற்கு இஃது ஓர் அத்தாட்சியே என்று அவள் கலங்கினாள்.

“யார் கோமாறன்? யார் போட்டியிடும் மாயமாறன்?” என்ற பூசல் குடும்பச் சூழலைக் கலக்கி ஊரிலும் அமளிப்பட்டது. ஆனால், பொதுவாக எல்லோரும் குறளிமாறனையே கோமாறன் என்று நினைத்தனர். அவனுக்காகவே இரங்கினர். பரிந்து பேசினர். மும்முடிக்கோ, குறளிமாறன் தான் கோமாறன் என்ற உறுதி ஏற்பட்டிருந்தது.

உண்மையில் குறளிமாறன் உருவிலும் செயலிலுமே அவன் நட்பு வேரூன்றியிருந்தது. குறளிமாறனுக்கு ஏற்பட்ட இக்கட்டுப்பற்றி அவன் எல்லோரிடமும் உணர்ச்சிவேகத் துடன் பேசினான். எதிரியாகிய கோமாறனை அவன் மாய மாறன் என்று கூறி ஏசினான். “ஊரார் இதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, மாயமாறனைப் பிடித்து நன்றாய் உதைக்க வேண்டும்" என்று அவன் எல்லாரிடமும் வலி யுறுத்திப் பேசினான்.

66

“இந்த நண்பனுக்கு நான் என்ன செய்தேன்? இப்படி என் குடி கெடுக்க முனைந்து கச்சை கட்டுகிறானே” என்று கோமாறன் வெம்பிப் புழுங்கினான்.

66

அடிக்கடி அவன் தன் தாயிடமும் மனைவியிடமும் ஆத்திரமாகப் பேசினான். ஆனால், அவர்கள் மிரளமிரள விழித்தனர். இதையும் அவன் அறிய முடியவில்லை. 'ஆண்டவனே, இஃது என்ன திருக்கூத்து! நீயுண்டு, நாங்கள் உண்டு என்று இருந்தோமே, அது போதாதா? இன்னும் ஏன் எங்களைச் சோதிக்கிறாய்? என்று அவர்கள் புலம்பினார்கள். ஆனால், அவர்கள் புலம்பலின் முழு வெப்பத்தை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அந்த ஆண்டவன்தான் அறிந்திருக்கக் கூடும்.

பூசல் வழக்காயிற்று. கொற்கைமா நகரிலு ள்ள

இளவரசன் கேள்வி மன்றத்தில் குறளிமாறனும் கோமாறனும் நின்றனர். குறளிமாறன் பக்கமே சான்றுகள் வலுத்தன. ஆனால், கோமாறன் கொந்தளிப்புக் கண்டு யாருமே திகைத்தனர். எனினும் பேயின் அமைதிக்கு எதிராக, மனித உணர்ச்சியின்