பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(274) ||

அப்பாத்துரையம் – 40

கொந்தளிப்பு என்ன செய்யமுடியும்? இளவரசன் மன்றத்திலிருந்து கோமாறனுக்கு எந்தத் தெளிவும் ஏற்படவில்லை.

அரசன் அளியாத நீதி தேடி, அவன் ஆண்டவனிடம் சென்றான். செந்தில் மாநகர் திருவீதிகளெங்கும் அவன் அழுது புலம்பிக்கொண்டே சென்றான்.

"என்

திருமணத்திற்குப் பணம் உதவிய செல்வச் சீமான்களே, இப்போது என்னை ஏன் கைவிட்டீர்கள்? மனைவி இல்லாத இளைஞனாயிருந்தபோது, என்னைக் கண்டு பரிந்து பணத்தை வாரித் தந்த தங்கைமார்களே, தாய்மார்களே! மனைவியை உயிருடனேயே இழந்து தவிக்கும் என்னைக் கண்டு, கருணை இல்லையா? அந்த ஊற்று வற்றி விட்டதா? ஆண்டவன் செந்தின் மாநகரில் இல்லையா? எங்கே போய்விட்டார்?” என்று அலறாத வண்ணம் அவன் அலறி அரற்றினான்.

கோயில் திருக்கூட்டம் கூடிற்று. திருக்கூட்டத்தார் உள்ளங்களெல்லாம் கோமாறன் பொங்கும் துயர் கண்டு கலங்கின. அவர்கள் மதுரை உயர்முறை மன்றத்துக்கே தெரிவித்து, மதுரையிலிருந்து சான்றாளர்கள் தருவித்தனர்.

கோமாறனுக்கும் இப்போது குறளிமாறனைப் போலவே சான்றுகள் கிட்டின. ஆனால், இதனால் அவனுக்கு எதுவும் நன்மை ஏற்படவில்லை, ஏனெனில், வழக்கு உண்மையி லேயே மாயவழக்கு என்ற முடிவுதான் ஏற்பட்டது. "ஆண்டவனே நேரில் வந்து தீர்த்தாலல்லாமல், மாயம் தீர வழியில்லை” என்று திருக்கூட்டத்தார் அறிவித்துவிட்டனர்.

“அரசன் நீதியும் கிட்டவில்லை. ஆனமட்டும் பார்த்தும் ஆண்டனும் வாய்திறக்கவில்லை. இனி என்ன செய்வேன்? எந்த உலகத்திற்குச் செல்வேன்?" என்ற புலம்பலுடன் வேறு எதுவும் அறியாமல், கோமாறன் எங்கெங்கும் திரிந்தான்.

வழக்கம்போல ஒரு நாள் அவன் தன் ஊர்ப்புறத்தி லேயே ஓர் ஆயர்பாடியருகில் புலம்பிக் கொண்டு சென்றான். பக்கத்திலுள்ள மரத்தடியில் ஏதோ ஒரு கும்பல் கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்தது. அதிலிருந்து ஒரு சிறுவன் அவனை நோக்கி வந்தான். "யாரப்பா நீ? உனக்கு என்ன நேர்ந்தது?