பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




278

||_ _ _

அப்பாத்துரையம் – 40

பேரையும் பணியாளான சிறுவன் காவலர் உதவியுடன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். காவலர் சிறுவன் ஆட்கள் போலப் பின்னணியிலேயே நின்றார்கள்.

முறைமன்ற நடவடிக்கைகள் போலவே கேள்விகள், குறுக்குக்கேள்விகள் எல்லாம் நடைபெற்றன. ஆனால், சான்றாளர்கள் வரவழைக்கப்படவும் இல்லை. அதுபற்றிய பேச்சும் இல்லை. எப்படித் தெளிவு ஏற்படமுடியும் என்று ஆயர் சிறுவர்களும், பிறரும் கவலைப்பட்டனர். அதே எண்ணம் தோன்றிக் காவலர்க்கும் தலைவர்க்கும் வியப்பூட்டிற்று.

ஊர்காவல்

கோவேந்தன் இறுதியில் கையமர்த்தினான். தீர்ப்புக் கூறப்போகும் பாவனையிலே, ஒரு குறிப்பேட்டையும் எழுது கோலையும் கையிலெடுத்தான். அவன் பேச்சையே யாவரும் எதிர்பார்த்து நின்றார்கள்.

“வழக்காடிகளே உங்கள் இருவர் சார்புகளையும் நான் நன்கு கேட்டாய்விட்டது. சான்றாளராக நான் எவரையும் அழைக்கவிரும்பவில்லை. நான் விரும்புவது கண்கூடான சான்றையே. இந்த வழக்கின் எல்லாக் கோணங்களையும் நன்கு கண்டிருக்கக்கூடிய சான்றாளர் ஒருவர்தாம் இருக் கிறார். அவரையே சான்றாளராக அழைக்கப் போகிறேன். அவர் முடிவே என் தீர்ப்பின் முடிவாக இருக்கும்” என்றான் கோவேந்தன்.

வழக்காடிகள் உட்பட யாவரும் சுற்றிப் பார்த்தார்கள். அத்தகைய புதுவகைச் சான்றாளர் யார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.

கோவேந்தன் மீண்டும் பேசினான்.

"நான் கூறும் சான்றாளரைக் காண நீங்கள் எங்கும் சுற்றிப் பார்க்கவேண்டாம். அவர் ஆண்டவன் தான். அவர் உங்கள் கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. ஆனால், அவர் தீர்ப்பை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்றான்.

கோவேந்தன் பேச்சு வழக்கின் புதிரை விடப் புதிராக ருந்தது. "புதிர் தீர்க்கும் இப் புதிர் யாதோ?" என்ற கேள்விக் குறி எல்லார் நெற்றிகளிலும் இருந்தன.