பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

279

கோவேந்தன் மடியிலிருந்து ஒரு சிறிய புட்டி எடுத்தான். அது நீலநிறமான புட்டி. அதன் மூடி திருகுமூடியாய் இருந் தது. அந்தப் புட்டியை அவன் வழக்காடிகள் இருவருக்கும் டையே வைத்தான்.

66

>>

கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை என்று கூறிக்கொண்டு, வழக்காடிகள் ஒவ்வொருவரும் இந்தப் புட்டிக்குள் தம் கை, கால், உடல், தலை எல்லா வற்றையும் அடக்க வேண்டும். யாரால் புட்டிக்குள்ளே சென்று உள்ளிலிருந்து பேச முடியுமோ, அவன் தான் உண்மையில் கோமாறன் ஆவான். இதுவே என் தீர்ப்பு” என்றான்.

தீர்ப்பு கேட்டு எல்லோரும் திகைத்தனர்.

கோமாறனுக்கு, வழக்கிலே முதல் தடவையாகக் கோபம் வந்தது. “இது என்ன தீர்ப்பு? நடித்த நடிப்பெல்லாம் இந்தக் குறும்புக்குத் தானா?” என்று அவன் சீறினான்.

"இதோ கோமாறனுக்கு உரியவர்கள் நிற்கிறார்கள். அவர்கள் சான்றாகக் கடவுளே உண்மைக் கோமாறனை அறிவிக்க இருக்கிறார். அதற்குள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய், வழக்காடியே?” என்றான் கோவேந்தன்.

கோமாறன் சீற்றம் அடங்கவில்லை. அவன் அடங்கிய கொந்தளிப்புடன் நின்றான்.

குறளிமாறன் முகம் மகிழ்ச்சியால் சிவந்தது. “கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை" என்று கூறிக் கொண்டு, அவன் புட்டி மீது குதித்தான். அவன் கால்கள் புட்டிக்குள் நுழைந்தன. உடல் நுழைந்தது. கைகள் முடங்கி அதனுள் நுழைந்தன. “பார்த்தீர்களா, என் மெய்மையை?” என்ற பெருமிதத் தோற்றத்துடன், தலையையும் அவன் உள்ளுக்கு இழுத்தான்.புட்டிக்குள் இருந்துகொண்டே, “போதுமா சான்று' என்று கூவினான்.

"5"

காவலர், ஊர்க்காவலர் உட்பட, எல்லோரும் திகைத்து நின்றனர். ஆனால், கோவேந்தன் திகைக்கவில்லை. அவன் அவசர அவசரமாகப் புட்டியின் மூடியை எடுத்தான். "போதுமையா