பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




280 ||_

அப்பாத்துரையம் – 40

சான்று, எல்லாம் விளங்கிவிட்டது!" என்ற சொற்களுடன், மூடியைப் புட்டிமீது திருகினான்.

"நடந்தது என்ன, நடப்பது என்ன” என்றே யாரும் தெளிவாக அறியவில்லை. புட்டிக்குள் இருந்த குறளிக்குக் கூட எதுவும் தெரியவில்லை. ஆனால், மூடி நன்றாக இறுகியபின், கோவேந்தன் அதை எடுத்து எல்லோருக்கும் தெரியும்படி காட்டினான். அதைக் கோமாறன் முன்னே நீட்டினான்.

“அப்பனே,நீதான் கோமாறன், உன் எதிரியாக நின்றவன் ஒரு குறளி. இதை ஆண்டவன் காட்டிவிட்டார். சற்றுமுன்பு நீ எவ்வளவோ கோபப்பட்டாய் படபடத்தாய். ஆனால், அதற்கும் பலன் இல்லாமல் போகவில்லை. உன் மனைவி, தாய், நண்பன் ஆகியவர்கள் சான்றுகளை இனி நீ கேட்பாய். முழு உண்மையும் அதன்பின் தான் உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்” என்றான்.

ஊர்க்காவல் தலைவர், காவலர் வியப்புக்கு இப்போது எல்லையில்லை; தீராத மாயத்தைக் கோவேந்தன் அறிவுத் திறம் தீர்த்துவிட்டது என்பதை அவர்கள் கண்டனர். ஆனால் இன்னும் என்ன முழு உண்மை என்று காணும் ஆர்வத்துடன், அவர்கள் வெளிப்படத் தம்மைக்காட்டிக்கொள்ளாமல் அமைந்து நின்றனர்.

"அன்பர்களே, வழக்கின் முடிவை நீங்கள் பார்த்தாய் விட்டது. எதிரியும் தண்டனை அடைந்து முடிந்துவிட்டது. இத்தனையும் ஆண்டவன் திருமுன்பிலே நிகழ்ந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதே ஆண்டவன் திருமுன்பில், இப்போது உங்களில் ஒவ்வொரு வரும் உங்கள் உள்ளத்தைத் திறந்து பேசவேண்டுகிறேன். முதலில் கோமாறன் தனக்கு நடந்தவை, தான் எண்ணியவை எல்லாம் கூறட்டும்" என்றான்.

கோமாறன் நடந்ததுமட்டுமின்றி, அதனால் தனக்கு ஏற்பட்ட குழப்பங்களையும் மன உடைவையும் எடுத்துரைத் தான். அது கேட்டு நண்பன் மும்முடி உள்ளம் அவனைச் சுட்டது. தாய் பூமாரி துடிதுடித்தாள். மனைவி குணமாலை பாகாய் உருகினாள்.