பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

281

அடுத்தபடி நண்பன் தான் கண்டதும் கேட்டதும் கூறினான். நண்பனாக எண்ணிய கோமாறன் மாறுதலையும், அவன் மனைவியைப்பற்றிய தன் தவறான கருத்தையும் கூட எடுத்துக்கூறி வருந்தினான்.

நண்பன் உரைகள் தாய் உள்ளத்தில் பூட்டை உடைத்தன. அவள் மனம் விட்டுப் பேசினாள். கோமாறனிடம் கண்ட மாறுதலை மகனின் மாறுதல் என்று கொண்டதால், அவளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பையும், அதன் பயனாக ஆண்டவனிடம் அவள் செலுத்திய புதுப்பாசத்தையும் அவள் கல்லும் உருக எடுத்து விளக்கினாள்.

நண்பன் உரையும், தாய் உரையும் குணமாலை உள்ளத்தை ஒரே உணர்ச்சிவெள்ளம் ஆக்கி விட்டன. அவள் கணவன் அன்பில்லாதவன் என்ற தன் எண்ணத்தை எடுத் துரைத்து மன்னிப்புக் கோரினாள். ஆயினும் அதற்காகத் தான் ஆற்றிய நோன்பு, சமூகப்பணி ஆ கியவைகள் பலித்து ட்டதற்காகக் கழிபேருவகை கொள்வதாக அவள் முடித் தாள். கோமாறன் வாழ்வில் புயலின் பின் தென்றல் வீசிற்று.

கோவேந்தன தீர்ப்பின் முழுப்பெருமையும் தமிழக மெங்கும் பரந்தது. மதுரைப் பேரரசனே அவனுக்குக் கோவேந்தன் என்ற பட்டத்துடன் ஆய்ப்பாடி முழுவதும் ஆளும் உரிமையும் அளித்தான். கோமக்களாகிய ஆயர் கோவேந் தனையே தம்குடி தழைக்கவந்த புதியதொரு கண்ணபெருமானாக வாழ்த்தி மகிழ்ந்தனர்.

.