பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

||---

அப்பாத்துரையம் – 40

அதர்கொடுங்கோலனாயிருந்தமையால் அவன் ஆட்சியை யாரும் விரும்பவில்லை. அவன் வாள் வலிமைக்கு அஞ்சியே பெருமக்கள் அவனுக்கடங்கியிருந்தனர். அவன் ஆட்சியிறுதியில் அவன் செய்த கொடுஞ்செயல் ஒன்று இவ்வெறுப்பை மிகுதிப்படுத்திற்று. அவன் கீழ்ச்சிற்றரசர்களாயிருந்தவர்களுள் கார்லாய்ஸ் என்பவன் ஒருவன். அவன் மனைவி இகெர்னே° அழகு மிக்கவள். அதர் அவளை விரும்பி அவள் கணவனைக் கொன்று அவளை வலுவில் மணந்து கொண்டான்.

கெர்னேயை மணந்து அவன் நெடுநாள் வாழவில்லை. பின்னர் இகெர்னே ஆர்தர்" என்றொரு பிள்ளையைப் பெற்றாள். இவனே பிற்காலத்தில் ஆர்தர். இகெர்னேக்கு கார்லாய்ஸ் மூலம் பெல்லிஸெண்ட் 12 என்ற புதல்வி இருந்தாள். அவள் சிறுபிள்ளையாயிருக்கையில் ஆர்தரின் விளையாட்டுத் தோழியாயிருந்தாள். வயது வந்ததும் அவன் ஆர்க்கினி3த் தீவுகளிள் இறைவனாகிய லாட்டை மணந்தாள்.

14

ஆர்தர் இகெர்னேக்கும் அதருக்கும் பிறந்தவனாகக் கொள்ளப்பட்டாலும், உருவிலோ குணத்திலோ மற்றெதிலோ அவன் தாய் தந்தையர்களைச் சற்றும் ஒத்திருக்கவில்லை. உண்மையில் அவன் பிரிட்டன் மக்களைப் போலவேயில்லை. பிரிட்டன் மக்கள் இருண்ட மாநிறமுடையவர் ஆர்தர் தூய வெண்பொன்மேனியுடையவர். பிரிட்டானியர் சற்று மட்டமான உயரமுடையவர்; ஆர்தர் உயர்ந்து நெடிய கை கால் உறுப்புகள் உடையவர். குணத்தில், ஆர்தரின் தந்தை அதர், கொடுமையும் மனம்போன போக்கும் உடையவர். இகெர்னே குடியினர்கூட ஒருவரை ஒருவர் வஞ்சித் தொழுகியவர்களே. ஆனால், ஆர்தர் தூய வீரமும் பேரருளும் பெருந் தன்மையும் மிக்கவர்.

ஆர்தரின் இச் சிறப்புக்கேற்ப அவர் பிறப்பையும் இறப்பையும் பற்றிப் பல அரிய கதைகள் கூறப்பட்டன. அவர் வாழ்க்கை தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்று மக்கள் நம்பியதற்கேற்ப, அதனை முற்றிலும் அறிந்தவனான மெர்லின் 5 அவரைப்பற்றிக் கூறுகையில், பேராழி யினின்றெழுந்தவர்; பேராழியிற் சென்றொடுங்குபவர். அவர் பிறப்பு இறப்பற்றவர்” என்று மிகவும் மறைபொருளாகக் கூறி வந்தார்.

66

அவர்