பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் – 40

அரசன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். உண்மையான அரசன் யார் என்பது இப்போது தெரியாமலிருக்கிறபடியால் இவ்வாள் மூலம் அதனை ஆராய்ந்து முடிவுசெய்வோம் என்றான்.

19

விருந்துக்கு வந்த பெருமக்கள் ஒரு போட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைவிட்டு ஒவ்வொருவராக வந்து வாளையெடுக்க முயன்று ஏமாந்து போயினர். இதற்கிடையே இதே போட்டிப் பந்தயத்தில் ஈடுபட ஆர்தருடன் வந்து கொண்டிருந்த ஆன்டன் பெருந்தகையின் மகனான கேப் பெருந்தகை தன் வாளைக் கொண்டுவர மறந்துவிட்டான். அவன் ஆர்தரை அனுப்பி அதை எடுத்துவரச்சொன்னான். ஆர்தர் செல்லும் வழியில் அரண்மனை மூலையில் பதிந்த கிடந்த வாளைக் கண்டு இதே போதுமே என்றெடுத்தான் அதுவும் எளிதில் வந்துவிட்டது.அதன் அருமை தெரியாத ஆர்தர் அதைக் கேயிடம் தரக் கே தந்தையிடம் சென்று ‘தான் அதை எடுத்துவிட்டதால், தானே அரசனாகவேண்டும் என்று கூறினான். பெருந்தன்மைமிக்க ஆன்டன் அவனை நம்பாமல் உறுக்கிக் கேட்க உண்மை வெளிப்பட்டது. அதன்பின் ஆன்டன் தன் மகனைக் கடிந்துகொண்டு வாளை மீட்டும் கல்லில் பதித்து அனைவரும் காண அதனை ஆர்தர் எடுக்கச் செய்தான். அதன்பின் மெர்லின் பெருமக்களையும் பொது மக்களையும் அழைத்து ஆர்தரை அரசராக முடிசூட்டினான்.

ஆர்தர் அரசனானவுடன் பொதுமக்களிடையேயும் பெருமக்களிடையேயும் உள்ள தம் நண்பர்களை அழைத்து குழப்பமடைந்த இந்த நாட்டில் நீங்கள் ஒழுங்கையும் தெய்வீக ஆட்சியையும் நிலைநாட்ட உழைப்பதாக ஆணையிட முன்வரவேண்டும். உண்மைக்குக் கடமைப்பட்டு நன்மையின் பக்கம் நின்று, ஏழை எளியோர் ஆதரவற்றோர் பெண்டிர் ஆகியவர்கட்கு இன்னல் வராமல் காக்கவே நான் கொடுக்கும் வாளைப் பயன்படுத்திப் புகழ்பெறுவதாக உறுதி கூற வேண்டும். ஒரு தலைவியே விரும்பி அவள் அன்பே புணையாகக்கொண்டு அருஞ்செயலாற்றவேண்டும். இத்தகைய புகழ்வீரருக்கு நான் 'தூயவீரர் பெருந்தகை’20 என்ற பட்டம் தந்து என் வட்ட மேடையில் இடந்தருவேன்" என்றார். அவர்களும் ஒத்து அவர் வட்ட மேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளை நிறைக்கலாயினர்.