பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

13

தயங்கிய தன் தந்தை, லான்ஸிலட்டுக்குத் தன்னை மணஞ் செய்விக்க ஒருப்படான் என்பதை அறிந்தாள். ஆகவே, லான்ஸிலட்டின் கடமையுணர்ச்சி ஒருபுறம்; ஆர்தரை மணந்தால் லான்ஸிலட் இருக்குமிடத்தில் அவன்மீதே உரிமை பெற்ற அரசியாக ஆட்சிபுரியலாம் என்ற கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக, ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. அத்துடன் லான்ஸிலட் கினிவீயரையன்றி வேறு எப்பெண்ணையும் விரும்புவதில்லை என்றும், கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. கினிவீயர் ஆர்தரை மணந்து கொள்வதனால் தான் மணமேயில்லாதிருந்து விடுவதாகவும் கூறவே, கினிவீயரின் தன்னலவேட்கை நிறைவு பெற்றது. தான் ஈடுபட்ட இத் தன்னல வாழ்க்கை ஆர்தரை வஞ்சித்ததாகுமே என்பதை இரண்டகமும் சூழ்ச்சியும் படைத்த அவளுள்ளம் உணரவில்லை.

மூன்று குதிரைவீரரை முரட்டுவீரன் துரத்திச் செல்லுதல்

ஆர்தர், கினிவீயரை வரவேற்றுக் காமிலட் நகரமெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்று அரண்மனை புகுந்தார். அவ் இளவேனில் பருவத்தில் நறுமலர்களிடையேயும் இனிய பறவைகளின் இசையிடையேயும் ஆர்தர், கினிவீயரின்