பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் – 40

ஒப்பற்ற தோழராகவும் இருந்தார். ஆயினும் அவருக்கு ஆர்தர் அரண்மனையிலிருந்து விருந்து வாழ்வு வாழப் பிடிக்கவில்லை. நாடெங்கும் சென்று காடுகளிலும் ஒதுக்கிடங்களிலும் மறைந்து மக்களைத் துன்புறுத்திவரும் ஆர்தரின் பகைவரைப் போரிட்டு வென்றழித்துத் தம் புகழைப் புதுப்பிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். சிறப்பாக ஆற்றுக்கடவருகிலுள்ள மாளிகைத் தலைவனாகிய துர்க்கைன்28 என்ற கொடிய வீரனை அழிப்பதிலேயே அவர் மிகவும் கருத்துக் கொண்டார். இந்நோக்கத்துடன் அவர் தம் மருமகனாகிய லயோனெல் பெருந்தகை யுடன் புறப்பட்டுச் சென்றார்.

29

அந்நாளில் பிரிட்டனெங்கும் நிறைந்திருந்த காட்டு வழிகளில் சுற்றியலைந்து மிகவும் களைப்படைந்து லான்ஸிலட் ஒரு மரத்தடியில் சோர்ந்து கண்ணயர்ந்து உறங்கினார். லயோனெல் பெருந்தகை பெருந்தகை அவரைக் காத்து அருகில் நின்றிருந்தான்.

அச் சமயம் காற்றினும் கடுக மூன்று வீரர் குதிரை மீதேறியோடினர். நெடிய பாரிய உடலுடைய ஒரு முரட்டுவீரன் அவர்களைப் பின்பற்றித் துரத்திவந்தான். அவர் கொடிய ஈட்டியால் அவர்களைக் காயப்படுத்தி அதன்பின் அவரவர் குதிரைகளின்

கடிவாளங்களால் பிணித்துக் கல்லிலும் முள்ளிலும் கட்டியிழுந்தான். இக்கொடுமையைப் பார்க்கப் பொறுக்காமல் லாயேனெல், லான்ஸிலட்டை எழுப்பக்கூடத் தாமதிக்காது முரட்டுவீரன் பாய்ந்தான்.

ஆயினும், முரட்டுவீரன் லயோனெலைவிடப் பன்மடங்கு வலிமையுடையவானயிருந்தபடியால் லயோனெலையும் மற்ற வீரர்களைப் போலவே கட்டியுருட்டி இழுத்துக்கொண்டு சென்று தன் மாளிகையில் சிறையிட்டான். அங்கு முன்பே பல வீரர்கள் ஆர்தர் வட்டமேடை வீரர் பலர் உட்பட சிறைப்பட்டிருந்தனர். அவர்களனைவரையும் காலை மாலை குதிரைச் சவுக்கால் குருதி கொப்பளிக்குமட்டும் அடிப்பதே அவனுடைய நாள்முறை விளையாட்டாயிருந்தது.

இவ்வீரன் வேறு யாருமல்லன் : லான்ஸிலட் பெருந்தகை தேடிக்கொண்டிருந்த கொடியவீரன் துர்கையனே, அவன்