பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

19

கடுமையாயிருக்கவே, துர்க்கைன் அவரை நோக்கி உன் வலிமையைப் பார்க்க, நீ என் மாபெரும் பகைவன் ஸான் ஸிலிட்டிடம் பழகியவன் போலிருக்கிறதே! என்றான். லான்ஸிலெட்டிடம் நான் ஸான்ஸிலட்டுடன் பழகியவனல்லன். லான்ஸிலட்டே தான்! உன் முடிவு நெருங்கிவிட்ட தாகையால் உன் முழுத் திறமையையும் காட்டிப் போர் செய்க” என்றான்.

31

சிறிது நேரத்தில் துர்க்கைன் பிணமாய் நிலத்தில் வீழ்ந்தான். காயம்பட்டுத் தூக்கிக்கொண்டு வரப்பட்ட வீரனாகிய கஹேரிஸ் பெருந்தகை விடுவிக்கப்படவே அவன் துர்க்கைன் வேலையாளிடமிருந்த திறவுக் கொத்தை வாங்கிக் கொண்டு சிறைப்பட்ட வீரரை விடுவிக்கச் சென்றான்.

ஆர்தரும் குதிரைவீரரும்