பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

22 ||

அப்பாத்துரையம் - 40

36

"அரசே! என் தலைவி லியோனிஸ்35 பெருமாட்டின் மாளிகைகளைச் செவ்வெளி நாட்டுச் சிவப்பு வீரன் முற்றுகையிட்டுத் தொல்லை தருகிறான். உங்கள் வீரருள் ஒருவனை அனுப்பி அவளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறேன்” என்றாள்.

முன்னால்

அரசர் அவளுக்கு அவளுக்கு விடை விடை தருவதற்கு போமென்ஸ் முன் வந்து, “அரசே! ஓர் ஆண்டுக்கு முன் நான் கோரிய இரண்டு வரங்களும் நிறைவேறவேண்டும் நாள் இது. என்னை இம்மாதுடன் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கும்படி அனுப்புவது ஒரு வரம். வட்ட மேடை வீரருள் தலைமைகொண்ட லான்ஸிலட் பெருந்தகையை என்னுடன் அனுப்பி நான் வேண்டும்போது என்னை வீரனாக்குவிப்பது மற்றொரு வரம்,” என்றான்.

லான்ஸிலெட் போமென்ஸை வீரனாக்கல்