பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

23

மன்னர் மகிழ்ச்சியுடன் இணங்கினர். ஆனால் லினெட் என்ற பெயருடைய அம்மங்கை முகம் கோணிற்று, “பெரும் புகழ்பெற்ற அரசரென்று இவரிடம் வந்தால், என்பின் மாண்புமிக்க தலைவியை மீட்க ஒரு தூய வீரனை அனுப்பாமல், அதற்கு மாறாக முகத்திலடித்ததுபோல ஒரு பணிப்பையனை அனுப்புவது?” என்று அவள் முனகிக் கொண்டாள்.

போமென்ஸ் அவள் முகச் சுளிப்பைக் கவனியாமல், அவள் பின் சென்றான். மன்னனிடம் அவன் கேட்டுக் கொண்டபடியே லான்ஸிலட் பெருந்தகையும் அவனுடன் சென்றார்.

அரண்மனையை விட்டு வெளியே வரும்போது போமென்ஸ் முன் ஒரு சிறுவன் நல்ல கவசத்துடன் ஓரழகிய குதிரையுடனும் காத்து நின்றான். போமென்ஸ் கவசத்தை அணிந்து குதிரையை நடத்திக்கொண்டு சென்றான்.

போமென்ஸ் அடிசிற்கூடத்தில் வேலையாளாயிருக்கையில் அப்பகுதியின்

அவனையும் பிறவேலையாட்களையும் தலைவரான கேப் பெருந்தகை கொடுமையாக நடத்திவந்தார். தம் கீழ் வேலையாளாய் இருந்தவன் பெரிய வீரனாக முயற்சி செய்வது அவருக்குப் பொறுக்க வில்லை. “ஆர்தராகட்டும்; வேறு யாராகட்டும்; என்கீழ் வேலை செய்யும் வேலையாளை என் இணக்கமின்றி வெளியே போகக் சொல்லயாருக்கும் உரிமை கிடையாது,” என்று கூறிக்கொண்டு அவர் போமென்ஸைத் தடை செய்ய வந்தார். போமென்ஸ் அவரிடம், “உம்வேலையின் மதிப்புப் பெரிதுதான். ஆனால், உமது உள்ளம் சிறுமைப்பட்டது. ஒருவர் தமக்கு மேலுள்ளவரிடம் கெஞ்சுவதில் பெருந்தன்மை யில்லை. கீழ் உள்ளவரிடம் பரிவு காட்டுவதுதான் பெருந்தன்மை என்பதை அறியாத நீர் ஒரு வீரரா?

கேப் பெருந்தகைக்குச் சினம் மூக்கையடைத்தது. அவர் தம் வாளின் பின்புறத்தில் அவனைத் தட்ட எண்ணினார். போமென்ஸ் தன் வாளுடையால் அதனைத் தடுத்து வீசி எறிந்தான். பின்னும் அவர் எதிர்க்க போமென்ஸ் அவரை எளிதில் வீழ்த்தி, 'ஆர்தரிடமே சென்று மன்னிப்புப் பெறுவீராக,” என்று கூறி அனுப்பினான்.

66