பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

25

வழியில் ஒரு மனிதன் காரெத் பெருந்தகையிடம் ஓடி வந்து ஐயையோ என் தலைவரைப் பாதுகாப்பாரில்லையா? ஆறு திருடர்கள் சேர்ந்து அவரைக் கட்டி வைத்து உதைத்கிறார்களே” என்று கதறினான்.

காரெத் பெருந்தகை அம்மனிதன் காட்டியவழியே சென்று அவன் தலைவனை மீட்டான். திருடர்களில் மூவர் கொலை யுண்டனர். ஓடிச்சென்று மற்றவர்களுள் மூவரையும் காரெத் விடாது துரத்திக் கொன்றபின் மீண்டும் தற்பெருமைமிக்க அம்மாதைப் பின்தொடர்ந்தான். அவன் போரிட்ட வீரத்தைப் பார்த்திருந்தும் அவள், அவனிடம் தான் காட்டிய புறக்கணிப் பையும் அவமதிப்பையும் விடவில்லை.

கடக்க

காரெத்தும் லினெட்டும் னட்டும் ஓர் ஓர் ஆற்றைக் வேண்டியிருந்தது. ஆற்றில் பாலம் எதுவுமில்லையாதலால் ஆழமற்ற ஒரு பகுதியில்தான் கடந்துசெல்ல வேண்டும். ஆனால், அவ்விடத்துக்கெதிராக மறுகரையில் இரண்டு வீரர் நின்று 'இதைக் கடந்து செல்லக்கூடாது' என்றனர். மாது, காரெத்தை நோக்கி இவர்களை உன்னால் எதிர்க்க முடியுமா? உனக்கு அச்சமாயிருந்தால் வேறு சுற்றுவழியில் செல்லலாம்” என்றாள். காரெத். “அம்மணி தங்கள் அவமதிப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆயினும் இரண்டு தடவை நான் போரிடுவதைக் கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்த அவநம்பிக்கை” என்று கூறிக்கொண்டே குதிரையை ஆற்றினுள் செலுத்தினான். ஆற்று நடுவில் வந்து அவனை எதிர்த்த முதல்வீரன் வெட்டுண்டுப்போக ஆறெல்லாம் அவன் குருதியால் சிவப்பாயிற்று. இரண்டாவது வீரனும் அதுபோலவே காரெத் வாளுக்கு இரையானான்.

மாலையில் அவர்கள் ஒரு மரத்தடியில் கறுப்புக் கவசமணிந்த ஒரு வீரனைக் கண்டனர். கறுப்புச் சேணமிட்ட கருங்குதிரை ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மரக்கிளையில் பறந்துகொண்டிருந்த ஒரு கருங்கொடியின் பக்கம் ஊதுகுழல் ஒன்று தொங்கிற்று. கறுப்பு வீரன் லினெட்டை நோக்கி" இவன்தான் ஆர்தர் அனுப்பிய வீரனோ! அப்படி யானால் குழலை ஊதி என்னுடன் போருக்கு வரட்டும்” என்றான்.