பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

||---

அப்பாத்துரையம் – 40

வெளியில் பாழாய்க் கிடக்கும் பழைய கோட்டைக்குச் செல்க” என்றான்.

கரெய்ன்டு அங்ஙனமே நகர்ப்புறத்துக்கு மீண்டும் வந்தான்.வீரனும் மங்கையும் நுழைந்த கோட்டை எதிரில் இடிந்து தகர்ந்த ஒரு பழங்கோட்டையைக் கண்டு அவன் அதில் நுழைந்தான். அங்கிருந்த ஒரு முதியவன் அவனை வரவேற்று அதில் அதிகம் இடிந்து பொடியாகாத ஓர் அறைக்குக் கொண்டு சென்றான். அங்கே அவன் மனைவியாகிய மூதாட்டியும், கந்தையாடையிலும் கட்டழகு மாறாத காரிகையாகிய அவன் புதல்வியுமிருந்தனர். அவர்களும் அவனை விருந்தாக ஏற்று முகமன் கூறினர்.

அவர்கள் வாயிலாக கெரெய்ன்டுக்கு அரசியை அவமதித்த வீரனைப்பற்றிய விவரமும், மறுநாளைய விழாவைப்பற்றிய விவரமும் தெரியவந்தன. அவன் அந்நாட்டில் நன்மக்களை நெடுங்காலம் துன்புறுத்தி வந்த பருந்துவீரன் என்ற புனைபெயருடைய எடிர்ன்38 என்பவனே. அந்நகரில் நெடுநாள் வாழ்ந்த பழங்குடியினனாகிய அப்பழங்கோட்டை வீரனை திர்த்து அவன் அக்கோட்டையை அழித்து அதிலுள்ள செல்வமனைத்தையும் கொள்ளையிட்டு. அச்செல்வத்தால் புதிய கோட்டைகட்டி நகரில் ஆட்சி புரிந்து வந்தான். அவ்வெற்றி நாளைக்கொண்டாடுமுறையில் தான் அதன் ஆண்டு நிறைவாகிய மறுநாளில் அவன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தன்னை எதிர்க்க முன்வரும் வீரரனைவரையும் வென்று வெற்றிமாலை சூடவும் திட்டமிட்டிருந்தான்.

கெரெய்ன்டிடம் அப்போது போரிடுவதற்கான கவசமும் போர்க்கருவிகளும் இல்லை. அவை தனக்குக் கிடைத்தால், தானே சென்று அவன் கொட்டத்தை அடக்க விரும்புவதாகக்

னான். முதியவனாகிய பழங்கோட்டை வீரன் ‘தன் துருப்பிடித்த கவசத்தையும் கருவிகளையும் வேண்டுமானால் தருகிறேன்.' என்றான். போரிடுபவர் அக்காலத்தில் தாம் தம் தலைவியாக ஒரு மங்கையை முன்னிட்டுப் போரிடுவது வழக்கம். போரில் வெற்றிபெற்றால் அவன் அவனுக்கு மாலையிட்டு அவனையே கணவனாகக் கொள்வான் கெரெய்ன்ட் முதிய வீரன் புதல்வியையே தலைவியாகக் கொள்ள எண்ணினான்.