பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

33

பெற்றோரும் அதற்கிசைந்தனர். மறுநாள் விழாவுக்கான கேளிக்கைகள் தொடங்குமுன் கெரெய்ன்டு பருந்துவீரன் முன்சென்று அவனைப் போருக்கழைத்தான். போரில் தோற்றால் ஆர்தர் அரசனிடம் பெற்ற விருதுகளை விட்டுக்கொடுப்ப தாகவும், வென்றால் தன் தலைவியாகிய பழையவீரன் புதல்விக்கு அவள் தந்தையிடம் கொள்ளையிட்ட பொருள்கள் யாவும் கொடுபட வேண்டுமென்றும் அவன் உறுதி கோரினான். பருந்துவீரன் இறுமாப்புடன் எதிருறுதி கூறவே மற்போர் தொடங்கிற்று.

அவன் மாசற்ற முகம்நோக்கி எனிட் கூறுகிறாள்

இருவீரரும் முதலில் குதிரைகள் மீதிருந்தும், பின் ஈட்டி கேடயங்களாலும், இறுதியில் வாளாலும் போர் புரிந்தனர். மூன்றிலும் பருந்துவீரன் தோற்றுவிடவே அவன் கொட்டமும் அவன் தலைவியாகிய மங்கையின் கொட்டமும் அடங்கின. பழைய வீரன்வசம் அவன் செல்வங்கள் யாவும் வந்தன.