பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் – 40

கெரெய்ன்டு மறுநாளே தலைநகராகிய காமிலட் சென்று பழைய வீரன் மகளாகிய எனிடை மணக்க விரும்பினான்.எனிடின் தாய் அவளை மணப்பெண்ணுக்கான ஆடையணிவித்தாள். ஆனால், கெரெய்ன்டு தான் அ அவளை அவள் பழைய கந்தையாடையுடனேயே கொண்டு செல்வதாகக் கூறினான். சற்று மனச்சோர்வுடன் எனிட் தன் புத்தாடைகளைத் துறந்த கந்தையாடையுடன் புறப்பட்டாள்.

காமிலட்டில் ஓரிரவு தான் எனிட் கந்தையாடையுடன் படுத்திருந்தாள். கினிவீயர் அரசியின் சேடியர் இரவோடிரவே அவளையறியாது அவளுக்கு அரசியருக்கும் கிட்டாத வெண்பட்டாடையுடுத்திப் பொன்னும் மணியும் பூட்டினர். எனிட் காலையில் கண்ணாடிமுன் சென்று தன்னையே அடையாள மறியமல் திகைத்தாள்.

கெரெய்ன்டு புன்முறுவலுடன் எதிரே வந்து உன் கந்தையாடையின் விலை இது. அதுவே என் காதலை உனக்குத் தந்தது. அதற்கு மாற்றாக அரசி கொடுத்த ஆடையணிகள் இவை, என்றான்.

எனிடும் கெரெய்ன்டும் கினிவீயர் அரசியின் மகனும் மருகியும்போல் சிறக்க இனிது வாழ்ந்தனர்.