பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 40

மூவர் எதிர்க்கக் காத்திருக்கின்றனர்

ஆர்தர், நல்லெண்ணமின்றித் தீய எண்ணங்களுக்கே இடந்தாராத தூய உள்ளம் படைத்த மன்னர். தாம் செய்ய வேண்டும் கடமைகளுள் ஒன்று செய்யப்படாம லிருக்கிறது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் சுறுக்கெனத் தைத்தது. ஆயினும், தம் புகழின் தவமணியாகிய கெரெய்ன்டு தம் குறைவை நிறைவுபடுத்தி விடுவான் என்ற கருத்துடன் அவர் அவனுக்கு விடை தந்தார். கெரெய்ன்ட் மனைவியுடன் தன் நாடு சென்று அவளுடன் இனிது வாழலானான்.

இன்ப வாழ்வைத் தூய்மைப்படுத்துவதே வீரம். ஆர்தரின் வட்ட மேடையின் தொடர்பு கெரெய்ன்டின் வாழ்வைத் தூய்மைப்படுத்தியவரை அவன் மனைவியைத் தொலைவிலிருந்தே அன்பு செலுத்தி வந்தான். டெவனில் வந்ததும், அவன் மற்றக் கடமைகளை யெல்லாம் மறந்து அவளுடைய மாடத்திலேயே இருந்து இன்ப வாழ்க்கையில் மூழ்கினான்.

பிறர் துன்பந்துடைத்த வீரன் என்று புகழ் படைத்த கெரெய்ன்டு, மணவாழ்வில் புகுந்ததும் தனது இன்பமே நாட்டமாய் விட்டான். அவன் வீரம் கெட்டுவிட்டது என்று பலரும் பேசினர். எனிட் காதுவரை இஃது எட்டிற்று. தோழியர்