பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

43

அவன் பேடியென்று தான் நினைக்கவில்லையானாலும் பிறர் அவ்வாறு சொல்லுகிறார்களே என்று கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.

அவர்கள் அடுத்தபடி நுழைந்த பகுதி டெவனிலேயே எவரும் அணுகத் துணியாத இடம். அது 'டூர்ம்’43 என்ற பெருஞ் செல்வனுக்குரியது. அவனிடம் குடி, சூது, வஞ்சகம், பெண்பழி ஆகிய எல்லாத் தீக் குணங்களுங் குடிகொண்டிருந்தன.பிரிட்டன் எங்கும் செங்கோலால் அறம் வளர்த்த ஆர்தருக்கெதிராக டவனெங்கும் தன் கொடுங்கோலால் மறம் வளர்த்த கொடியோன் அவன்.

அடக்கஞ் செய்த இடத்தில் வீரக்கல் நாட்டினர்

இத்தகைய கொடிய நாட்டில் எந்நொடியில் பகைவர்கள் வருவார்களோ என்ற எச்சரிக்கையுடன் சென்றாள் எனிட். எனவே, கெரெய்ன்டு கேளாத குதிரைக் காலடி ஓசை அவளுக்குக்