பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் – 40

கேட்கவே திரும்பிப் பார்த்தாள். மூன்று குதிரை வீரர் குதிரை நுரை தள்ளும்படி ஓடிவருவதையும், முன் வந்தவன் அண்டி விட்டதையும் அவள் கண்டாள். அவன் லிமூர்ஸே என்றும் அவள் ரே நொடியில் கண்டு கொண்டாள்.

கணவன் ஆணையை நினைத்து அவள் வாய் திறவாமலே பின்புறம் நோக்கிக் கையைக் காட்டினாள். கெரெய்ன்டு லிமூர்ஸை எதிர்த்துப் போரிட்டான். இருவரும் மாறிமாறிக் குத்திக் கொள்ள முயன்றும் இறுதியில் லிமூர்ஸ் விழுந்தான். அவனைப் பின்பற்றி வந்த வீரரும் அது கண்டு ஓடிவிட்டனர். லிமூர்ஸ் குதிரையும் அவனை இழுத்துக் கொண்டே ஓடிற்று.

போரில் ஈட்டியால் குத்தப்பட்டு நெஞ்சில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டுக் கவசத்தினுள்ளாகக் குருதி கசிவதைக்கூடக் கெரெய்ன்டு பொருட்படுத்தவில்லை. எனிட் அதனைக் குறிப்பாயறிந்து ஒன்றும் பேசத்துணியாமல் மெல்லச் சென்று கொண்டிருந்தாள். ஆயினும், அவன் முற்றிலும் சோர்ந்து விழுந்துவிடவே, அவள் உடனே குதித்துச் சென்று அவன் கவசத்தை அகற்றித் தன் மேலாடையைக் கிழித்துக் கட்டினாள். காயம் படுகாயமான தானாலும், குருதி மிகுதியும் சிந்தியதனாலும் கெரெய்ன்டு தன்னுணர்வின்றிக் கிடந்தான். எனிடின் குதிரைகூட ஓடிப்போய் விட்டதனால், தான் முற்றிலும் தனிமையாய்ப் போய்விட்டதைக்கூட அறியாமல், ஏழை எனிட் அழுது கொண்டிருந்தாள்.

அவ்வழியாக அச்சமயம் வேட்டைக்குப் புறப்பட்டு டூர்மும் அவன் ஆட்களும் வந்தனர். கெரெய்ன்டு இறந்து விட்டவன் போலவே கிடந்ததனால் டூர்ம், எனிடைக் கைப்பற்றும் நோக்கங்கொண்டு நன்மை செய்ய எண்ணியவன்போல் கெரெய்ன்டுடன் அவளை அரண்மனைக்குக் கொண்டு போகும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.

அன்று முழுவதும் எனிட், கெரெய்ன்டுக்கு உணர்வு மீளும்படி எல்லா முயற்சிகளும் செய்தாள். அன்று முழுவதும் அவள் உணவு உட்கொள்ளவே யில்லை.

மாலையில் வந்த டூர்ம் நல்ல உணவும் குடியும் தந்தும், நல்லுடையுடன் ஆடையணிகளையும் தந்தும் அவளைத் தன்