பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

50

அப்பாத்துரையம் - 40

நுழைய வேண்டா', என்றெழுதியிருந்தது. துணிகரவீரன் என்று பெயரெடுத்த பலினா அதைச் சட்டை செய்பவன்? அவன் அதைக் கடக்கப் போகும்போது ஒரு கிழவனின் உருவம் அவன்முன் தோன்றித் 'துணிகரமிக்க பலின்! இன்னும் ஓர் அடிகூட முன் வைக்காமல் பின்னால் சென்றுவிடு, என் று கூறிற்று. பலின் இதையும் சற்றும் பொருட்படுத்தவில்லை.

சற்றுநேரம் சென்றபின் ஒரு குழல் ஊதிய ஓசை கேட்டது. உடனே நூறு பெண்கள் வெளிவந்து பலினை வரவேற்று விருந்து நடத்தினர். விருந்து முடிவில் பெண்களின் தலைவி எழுந்து பலினை நோக்கி 'இரட்டைவாள் வீரரே! எங்கள் மாளிகையில் வரன்முறையாக ஒரு வழக்கமுண்டு இங்கே வருகின்ற எந்த வீரனும் எங்களுக்குரிய அண்மையிலுள்ள தீவைக் காக்கும் எங்கள் வீரனை எதிர்த்துப் போரிட வேண்டும். போரில் வென்றவனே அதன்பின் எங்கள் வீரனாய் இருப்பான் என்றாள்.

பலின், ‘இது மிகவும் கெட்ட பழக்கமே. ஆயினும், போரிட நான் அஞ்சவில்லை,' என்று கூறி எழுந்தான். பெண்கள் அவனை ஒரு படகிலேற்றித் தீவில் கொண்டு போய் விட்டனர்.

தீவிலுள்ள மாளிகையிலிருந்த சிவந்த கவசம் அணிந்து செஞ்சேணமிட்ட சிவப்புக் குதிரையின்மேல் ஒரு வீரன் ஏறிவந்து பலினை எதிர்த்தான்; அவன் உண்மையில் வேறு யாருமல்லன்; பலினின் உடன்பிறந்தவனான பலானே.பலினிடம் இரண்டு வாள் இருப்பது கண்டு, அவன் இவன் நம் உடன்பிறந்தான் பலின் தானோ, என்று தயங்கினான். ஆனால், பெண்கள் பலினின் கேடயத்தை மாற்றிப் புதிய கேடயம் கொடுத்திருந்தபடியால் அவன் பலினாக இருக்கமாட்டானென்று பலான் எண்ணினான். அப்போது அவன் வாய்திறந்து நீ யார்?" என்று கேட்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை வீணில் முடிவடைந்திருக்காது.

கடும் போரிட்டதன்பின் ஒருவர் வாளால் மற்றவர் வெட்டுண்டு இருவரும் வீழ்ந்தனர். பலின், பலானை நோக்கி, உன்னைப் போன்ற வீரமிக்க இளைஞனுடன் நான் இதுகாறும் போரிட்டதில்லை. நீ யார் என்று நான் அறியலாமா?” என்று கேட்டான் பலான். “ நான் பலினின் உடன் பிறந்தான் பலான், இத்தீவில் முன் காவல் செய்த வீரனைக் கொன்று அவனிடத்தை