பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் – 40

காட்டிற்று. விவியன், ஆர்தரிடமே தன் பசப்பு வேலையைக் காட்டலானாள். அழுகல் பிணத்தையன்றி நல்ல பொருள்களைக் கழுகினால் காண வியலாதன்றோ! அதுபோல் ஆர்தர் நற்குணங்கள் அவள் கண்ணுக்குப் படாமல் அரசி அவரை வஞ்சித் தொழுகுவதை அவர் அறிய முடியாதிருந்தனர் என்ற குறை மட்டுமே அவள் கண்களுக்குப் பட்டது. கினீவீயரின் வஞ்சனைக்கு ஆளானவர் தன் வஞ்சனைக்கும் உட்படுவார்' என அவள் நினைத்தாள். ஆனால், உலகில் வஞ்சனை என்ற ஒன்று உண்டு என்பதைக்கூட அறியாத தூயமனமுடைய ஆர்தர் அவளை ஏறிட்டுக் கூடப் பாராமல் உதறித் தள்ளினார். இதனால் சினங்கொண்ட அவள், பார்; உன் ஒழுக்கக் கோட்டையின் வேரையே அழித்துவிடுகிறேன், என்று உள்ளத்துக்குள் வஞ்சினங் கூறிக்கொண்டாள்.

ஆர்தர் ஒழுக்கக் கோட்டைக்கு வேராயிருந்தவன் மெர்லினேயென்று விவியன் அறிவாள். அவன் இயற்கையின் புதைந்த அறிவனைத்தும் திரண்ட உருக்கொண்டது போன்றவன்; நாத்திறமிக்க கவிஞன்; கைத்திறமும் வினைத்திறமும் வாய்ந்த சிற்பி. அவன் மாயமும் மந்திரமும் அறிந்த வனாயினும் அவற்றை நல்லறிவு வகையிலும் உலக உலக நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அருளாளன். ஆயினும், கதிரவன்போல் உலகெங்கும் ஒளிபரப்பும் அவன் புகழைக் கைக்குடை மறைப்பதுபோலத் தன் சூழ்ச்சியால் அவன் புகழை மறைத்துவிட விவியன் துணிந்தாள்.

மலையில் வளை தோண்ட எண்ணும் எலியைப்போல மெர்லினை எப்பகுதியில் தாக்கலாம் என்று அவள் தன் றமெல்லாம் கூட்டிக் கொண்டு உக் கொண்டு ஆராய முயன்றாள். வெளிப்பார்வைக்குக் குழந்தைபோல் ஊடாடும் அவள் விளையாட்டியல்பும் நாநலமும் இவ்வகையில் அவளுக்கு ஓரளவு உதவின. அவள் மெர்லினுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவனைச் சுற்றிச் சுற்றித் திரிவாள். அவன் செல்லுமிடமெல்லாம் சென்று அவனைச் சுற்றிப் பாடி ஆடுவாள். அவனைத் தந்தை என்றழைத்துப் பிள்ளைபோலக் கொஞ்சி மழலையாடுவாள். அவனையே தன் ஆசிரியரெனக்கொண்டு தனக்குக் கல்வி கற்பிக்கும்படி கோருவாள். மெர்லின் கூரறிவு அவள் வெறுமை,