பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

55

கீழ்மை, வஞ்சம் ஆகியவற்றை எளிதில் கண்டுகொண்டது. ஆயினும், அறிவுக்கன்றி அன்புக்கு அவ்வளவு இடம் இதுவரை ஏற்பட்டிராத அவன் மனம் அவள் குழந்தை நடிப்பிலும் அரைகுறை மழலைச் சொற்களிலும் ஈடுபட்டது. அவன் தன் மாயத்தால் பெண்களையும் குழந்தைகளையும் களிப்பூட்டத்தக்க சிறிய வித்தைகள் சிலவற்றை அவளிடம் பொழுதுபோக்காகக் காட்டினான். அவற்றைக்கண்டு மிகவும் களித்து வியப்பவள் போலப் பாசாங்கு செய்து விவியன் அவனை இன்னும் ஊக்கி மென்மேலும் பலவகை வித்தைகள் காட்டும்படிக் கூறினாள். அவ்வப்போது பேச்சை இவ்வித்தைகளின்பாலும் மாய மந்திரங்களின்பாலும் திருப்புவாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவன் தன்னை மறந்து பலவகைப் புதுப்புது வகையான மாயங்களைப்பற்றிப் பேசுவான். அவற்றுளொன்று, பிறரை வசப்படுத்திச் செயலற்றுப் போகும்படி செய்வது. இதைப்பற்றிக் கேட்டது முதலே விவியனின் விளையாட்டு நடிப்பிடையே வெற்றி நடிப்புக் கணப்போதில் கருக்கொண்டு வளைந்து வளர்ந்தது.எப்பாடுபட்டாவது இவ்வொரு வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டால் கற்பித்த ஆசிரியனாகிய அவனை நடைப்பிணமாக்கி ஆர்தர் நோக்கங்களை நிறைவேற்றிவைக்கும் வலக்கையாகிய அவனை ஒழித்து விடலாம் என்று அவள் எண்ணினாள். இவ்வெண்ணத்துடன் அதுபற்றி அடிக்கடிப்பேசி, அதனை அவன் வெளியிடும்படி வற்புறுத்தலானாள்.

விளையாட்டு மிஞ்சிவிட்டது எனக்கண்டு மெர்லின் பேச்சைமாற்றி மறைக்கப் பார்த்தான்; பின் அவளுடன் பேசுவதையே நிறுத்திப் பார்த்தான். ஆனால், அவன் மாயத்திலும் தன் மாயத்தை அவள் பரக்க விரித்து முற்றுகையிடுவது கண்டதே அவன் அவளறியாமல் அவளை விட்டு விலகி வெளிநாடு சென்றான். ஆனால், விவியன் அவன் போக்கு முற்றிலும் மறைந்திருந்து கவனித்து அவனறியாமல் அவனைத் தொடர்ந்தாள். இருவரும் தம்மிடத்திலிருந்து நெடுந்தொலை விலகிக் காட்டிற்குச் சென்றபின், மெர்லின் மனதயர்ந்திருக்கும் சமயம் பார்த்து, அவள் அவன்முன் சென்று, "நான் சிறுபிள்ளை என்று நினைத்து இப்படி ஏமாற்றவேண்டா" என்றும்,"ஆண்டில் இளையளாயினும் முதிர்ச்சியுடையவளான படியினாலே நான் உன்னைத் தொடர்ந்து வரமுடிந்தது,” என்றும்

அன்பில்