பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 40

ஆற்றலும் அவனுக்குப் பன்மடங்கு கீழ்ப்பட்ட அச்சிறு கள்ளியின் மாயத்திற்குக் கட்டுப்பட்டு அம் மரத்திலேயே புதையுண்டன. எலி, மலையைச் சிறைப்படுத்தியதுபோல் தனக்கு மந்திரங் கற்பித்த ஆசானைச் சிறைப்படுத்தி நடைப்பிணமாக்கி அவள் வெற்றியுடன் ஆர்தர் நகராகிய காமிலட்டுக்கு மீண்டு வந்தாள். அதுமுதல் ஆர்தரின் ஒழுக்கக் கோட்டையில் ஒழுக்கக்கேடு பெருகி அழிவுப்பயிர் வளரலாயிற்று.