பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

61

காணிக்கையாய்ப் பெற்ற அரசிக்கு ஒன்பதாவதும் எல்லா வற்றிலும் மிகப் பெரிதானதுமான கடைசி மணியையும் பெற்று ஆரமாக அணியவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே, அவள் லான்ஸிலட்டை விழாவிற்குப் போகும்படி வற் புறுத்தலானாள்.

லான்ஸிலட் : அம்மணி? இப்போது நான் என்ன செய்யட்டும்? அரசர் கூறியபோது பிடிவாதமாக மறுத்துவிட்டு இப்போது போனால் அவர் மனம் எப்படியாயிருக்கும்?

அரசி: இதுவா பெரிய தடை, அதற்கு எளிதில் நான் வகைசொல்லித் தருகிறேன். எல்லாரும் என்னை லான்ஸிலட் என்றறிந்து வெற்றியை எளிதில் விட்டு விடுகிறார்கள். இதனால், இகழுரைக்கும் அவமதிப்புக்கும் இடம் ஏற்படுகிறது. ஆகவே ஆளுடை தெரியாத வகையில் மாற்றுருவில் வந்து போட்டியிட எண்ணினேன்' என்று சொல்லிக் கொள்க! அதற்கேற்பக் கேடயத்தையும் மாற்றிக்கொண்டு செல்க.

லான்ஸிலட் சரி என்று புறப்பட்டார். ஆளடையாளம் அறியாமலிருக்கும்படி லான்ஸிலட் நேர்வழிவிட்டுச் சுற்றுவழிகளினூடாகச் சென்றார். அதில் வழி தவறி எங்கு வருகிறோம் என்று தெரியாமலேயே ஒரு மாளிகையுள் நுழைந்தார். அங்கிருந்த ஒரு கிழவர் அவரை வரவேற்று உள் அழைத்துச் சென்றார். அம் மாளிகை ஆஸ்டொலட் மாளிகை9 என்பது; அதன் தலைவரே அக்கிழவர். அவருக்கு டார்50 லவேயின்" என்ற இரு புதல்வரும், அல்லி மங்கை52 என்றழைக்கப் பட்ட ஈலேயின்53 என்ற புதல்வியுமுண்டு. லான்ஸிலட் உள் நுழைந்தபோது அவர்கள் யாரோ ஒருவர் பேசிய துணுக்குப் பேச்சைக்கேட்டுக் கலகலவென்று அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

லான்ஸிலட் பெருந்தகை தமக்கு அவ்விடம் புதிதாகவும் ஆள்கள் புதியவராகவும் தோற்றவே அதனைப் பயன்படுத்தித் தம் பெயரை மறைத்துக் கொண்டார்.அதோடு தாம் ஆளடையாள மறியாமல் விழாவுக்குச் செல்ல விரும்புவதால் கேடயத்தை அங்கேயே வைத்துவிட்டு, வேறு கேடயம் கொண்டுபோக விரும்புவதாகவும் அவர் கோரினார். டார்ப் பெருந்தகை முதல் ஆண்டுப் போட்டி விழாவில் காயமுற்றுப் போரில்