பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

||_ _ _

அப்பாத்துரையம் - 40

கலக்கமுடியாமல்

போய்விட்டதால்

லான்ஸிலட்டுக்குக் கொடுக்கப்பட்டது.

அவன்

கேடயம்

லான்ஸிலட்சற்று ஆண்டு சென்றவராயினும் ஆஸ்டொலட் குடியின் செல்வக் குழந்தையாகிய ஈலேயின் மனத்தில் அவர்மீது பேரார்வம் ஏற்பட்டது. அவளைக் குழந்தை என்ற முறையில் லான்ஸிலட் தங்கைபோல் பரிவுடன் பாராட்டியதை அவள் தப்பாகப் புரிந்து கொண்டாள். தன் இளங்குழந்தை மனத்தில் அவர்மீது கொண்ட பற்றுதலுக்கு அவள் நீர்வார்த்து அதனை வளர்த்து வந்தாள். பெண்கள் தாம் விரும்பிய தலைவருக்கு அல்லது உறவினர்க்கு விழாவிலணியத் தம் கைக்குட்டையைக் கொடுப்பது வழக்கம். அவளும் அதன்படி லான்ஸிலட்டுக்குத் தன் கைக்குட்டையைக் கொடுத்தாள். லான்ஸிலட், கினிவீயருக்கு முன் கொடுத்த உறுதிமொழியை எண்ணி நான் இதுவரை எந்த மங்கையின் அறிகுறியையும் அணிந்ததில்லை' என்றார். உடனே அவள் திறம்படி, அப்படியாயின் இப்போது என் அறிகுறியை அணிந்தபின் உம்மை யாரும் அறவே அறிந்து கொள்ள மாட்டார்கள்,' என்றாள். அஃது உண்மையே என்று கண்டு லான்ஸிலட் இணங்கினார். வற்புறுத்தி வழக்காடிப் பெற்ற அவ்வெற்றியைக் கூட அப்பேதை தன் காதலின் வெற்றி எனக் கொண்டாள்.

போட்டி விழாவில் லான்ஸிலட் மற்றோர் புதிய வீரனென்று அவர் உறவினரும் நண்பரும் நினைத்தனர். தம் லான்ஸிலட்டின் புகழைக் கொள்ளைகொள்ள இவன் யார் என்று தருக்கி அவர்கள் போட்டியில் அவர் வெற்றி பெறும்போதெல்லாம் அவரை வெறிகொண்டு ஒற்றுமையுடன் தாக்கினர். அப்படியும் தோலா வீரரான லான்ஸிலட்டே வெற்றிகொண்டவ ராயினும் பலநாள் உயிருக்கு மன்றாடும் நிலையில் படுகாயப்பட்டார். வெற்றியறிகுறியாகிய மணியைக்கூடப் பெறாமல் அவர் லவேயினுடன் பக்கத்திலுள்ள ஒரு துறவியின் மடத்தில் சென்று தங்கினார்.

லான்ஸிலட் இங்கே இங்ஙனம் இருக்க ஈலேயின் ஆஸ்டொலட்டில் லான்ஸிலட்டையே எண்ணி எண்ணித் தன் மனக்கோயிலில் அவர் உருவை வைத்து வழிபடலானாள். அவர் பெயரை அவள் அறியாவிட்டாலும் ஆர்தர் வட்ட மேடையில்